திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திய 5 நடிகைகள்.. வெண்பாவாக போராடிய ஜோ

5 Actress: கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமையும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தரும். மேலும் படத்தின் பெயரைச் சொன்னால் இவர்களின் கதாபாத்திரம் கண்முன்னே வந்து நிற்கும் அளவிற்கு சிறப்பாய் அமைந்திருக்கும்.

அவ்வாறு கருத்து சொல்லும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த ஹீரோயின்கள் ஏராளம். மேலும் நீதிக்காக போராடி தன் வாக்கை பதிவு செய்யும் அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திய 5 நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: ஒரே முக ஜாடையில் உள்ள 5 நடிகைகள்.. தளபதியே பார்த்து வியந்த அக்கடுதேசத்து நடிகை

அனுஷ்கா ஷெட்டி: ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமலாபால், நாசர், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மூளை வளர்ச்சி குறைவாய் காணப்படும் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் விக்ரம் சிறப்புற தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தந்தை மகள் பாசத்திற்கு இடையூறாய் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நியாயத்தை வழங்க போராடும் கதாபாத்திரத்தில் அட்வகேட்டாய் களம் இறங்கி இருப்பார் அனுஷ்கா.

லட்சுமி: 1988ல் உறவுகளின் நுணுக்கங்களை உணர்த்தும் விதமாய் அமைந்த படம் தான் பாச பறவைகள். இப்படத்தில் சிவக்குமார், மோகன், ராதிகா, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ராதிகாவின் கணவனான மோகன் கொல்லப்படுவதால், தன் சொந்த அண்ணனை சந்தேகப்படும் கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்புற நடித்திருப்பார். அவற்றிலிருந்து தன் கணவனை மீட்டு வர, வாக்கில் தன் போராட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார் லட்சுமி.

Also Read: 2ம் பாகம் தான் ஒரே வழி.. கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 5 பிரபலங்கள்

ஜோதிகா: மர்மமான முறையில் கொல்லப்படும் பெண் குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்மகள் வந்தான். இப்படத்தில் தன்னைக் காப்பாற்றிய, தாயின் மகளின் மரணத்திற்கு நியாயம் கொண்டுவர நீதிக்காக போராடும் சிறந்த அட்வகேட் கதாபாத்திரத்தில் அசத்திருப்பார். திகில் ஊட்டும் விதமாய் கொடுமைகள் கலைய இவர் மேற்கொண்ட செயல்கள் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

அம்பிகா: 1985ல் ஆக்சன் திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சமூகத்தை சீரழிக்கும் விஷயங்களை கலைய முற்படும் கதாபாத்திரங்களில் ரஜினி சிறப்புற நடித்திருப்பார். மேலும் தான் மேற்கொண்ட சம்பவத்தை நீதிபதிக்கு புரிய வைக்கும் விதமாய் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் சிறந்த அட்வகேட் கதாபாத்திரத்தில் அம்பிகா தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: வசமாய் சிக்கிய கண்ணன்.. ஐஸ்வர்யா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா, இது தேவைதான்

சாரதா ஸ்ரீநாத்: 2017ல் அதிரடி திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், வரலட்சுமி சரத்குமார், சாரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். விஜய் சேதுபதி செய்து வரும் குற்றங்களை கொண்டு தண்டனை வாங்கி தர, சிறந்த போலீஸ் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருப்பார். மேலும் எதிர்மறையாய் மாதவனின் காதலி ஆன சாரதா ஸ்ரீநாத், வேதாவாகிய விஜய் சேதுபதிக்கு அட்வகேட்டாய் இடம்பெற்று இருப்பார்.

Trending News