Actor Rajinikanth: பொதுவாக சில கதாபாத்திரங்கள் காலம் கடந்தாலும் மனதில் நிற்கும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இன்னும் சொல்லப்போனால் அதில் நடித்த நடிகர்களை கதாபாத்திரங்களின் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு சில கேரக்டர்கள் இருக்கும். ஆனால் பெயரை சொல்லாமல் ஜெயித்து காட்டிய சில கதாபாத்திரங்களும் இருக்கிறது. அதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
முத்து: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இதில் ரஜினியின் கேரக்டர் முத்துவாக இருந்தாலும் அவருடைய அப்பா கேரக்டர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஜமீன்தார் என்று அழைக்கப்படும் அவரின் பெயரை கே எஸ் ரவிக்குமார் காட்டாமலேயே விட்டிருப்பார். இருந்தாலும் இந்த கேரக்டர் இன்றுவரை மனதில் நிற்கிறது.
Also read: ஏஆர் ரகுமானை மேடையில் அசிங்கப்படுத்திய 3 பிரபலங்கள்.. திருப்பி வச்சு செய்த இசை புயல்
தி கிரேட் இந்தியன் கிச்சன்: மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படம் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது. இல்லத்தரசிகளின் சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் இருந்த அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. ஆனால் இறுதிவரை ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அது மட்டுமல்லாமல் படத்தில் வரும் எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் இருக்காது.
மெர்குரி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரில்லர் படமாக வெளிவந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இதில் பிரபுதேவா பார்வையற்றவராக வருவார். ஆனால் அவருடைய கேரக்டரின் பெயர் என்ன என்பது இறுதிவரை தெரியாது. ஒரு பழிவாங்கும் படலமாக இருந்த இந்த படம் பரவலான விமர்சனங்களை பெற்றது.
Also read: கமலின் நெருக்கமான 5 இயக்குனர்கள்.. 30 வருட காலம் கூடவே கூட்டி வரும் ஜாம்பவான்கள்
மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில் ஜே.டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்யின் முழு பெயர் என்ன என்பது இறுதி வரை காட்டப்படாமல் இருக்கும். கடைசி காட்சியில் தான் லோகேஷ் அந்த கதாபாத்திரத்தின் பெயர் ஜான் துரைராஜ் என்பதை காட்டியிருப்பார். இருந்தாலும் விஜய் ஜே.டி என்ற கேரக்டராகவே மனதில் நின்று விட்டார்.
அச்சம் என்பது மடமையடா: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் சிம்புவின் பெயர் கடைசியில்தான் தெரியும். அப்படி ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கும் இயக்குனர் இறுதியில் அவருடைய பெயர் டி.சி.பி ரஜினிகாந்த் முரளிதரன் என தெரியப்படுத்தி இருப்பார்.
இவ்வாறாக இந்த ஐந்து கதாபாத்திரங்களும் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Also read: பாலச்சந்தரின் மறக்க முடியாத 5 படங்கள்.. ரஜினியை புது பரிமாணத்தில் காட்டிய படம்