திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துருவ நட்சத்திரத்திற்கு பின் கௌதம் மேனன் செய்யப் போகும் சம்பவம்.. அதிரடி இரண்டாம் பாகம்

Director Gautham Menon: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படம் பல போராட்டத்திற்கு பிறகு வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.  கடந்த சில வருடங்களாகவே கௌதம் மேனன் இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார், நடிப்பில் தான் பிச்சு உதறிக் கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதனால் மறுபடியும் தன்னுடைய டைரக்சனை துவங்கி இருக்கும் கௌதம் மேனன், ஹிட் கொடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக கையில் எடுத்திருக்கிறார். இதற்கு காரணம் சமீபத்தில் கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தை ரீ ரிலீஸ் செய்ததுதான்.

Also Read: விஜய்க்கு ஆபத்தை ஏற்படுத்திய ஓவர் நெருக்கம்.. பேசி பேசியே பழைய குட்டையை தோண்டிய கௌதம் மேனன்

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் முன்பை போலவே அமோக வரவேற்பு கிடைத்ததால், அந்த படத்தின் 2ம் பாகத்தை எடுப்பதற்கான முழு ஸ்கிரிப்ட் வேலையையும் கௌதம் மேனன் முடித்துவிட்டார். மேலும் பார்ட் 2வில் இடம்பெறும் முதல் 45 நிமிட காட்சியை பற்றி கமலிடமும் விரிவாக சொல்லிவிட்டாராம். இதற்கான ஸ்கிரிப்ட் வேலையும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். அது மட்டுமல்ல இதில் கமலுடன் ராயபுரம் மணியும் ஆரம்பக் காட்சியில் இருக்கிறார்.

ஆகையால் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ராகவனுக்கும் ராயபுரம் மணிக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெறும். எனவே துருவ நட்சத்திரம் வெளியான பிறகு, கமலின் படங்களை பொறுத்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை விரைவில் துவங்க இருப்பதாக கௌதம் மேனன் சமீபத்திய பேட்டியில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Also Read: துளி கூட விருப்பம் இல்லாமல் வெளிவரும் விக்ரமின் படம்.. வழி மாறிய இயக்குனரால் சோழி முடியும் கேரியர்

பலரும் கௌதம் மேனனுக்கு டைரக்சன் விட்டு போச்சு என சொன்னதால் இப்போது வேட்டையாடு விளையாடு 2 படத்தின் மூலம் தன்னை யார் என நிரூபித்து காட்டப் போகிறார். ஏனென்றால் துருவ நட்சத்திரம் படத்தின் மீதும் இவருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. இந்தப் படம் எடுக்கும் போதே விக்ரம் மற்றும் கௌதம் மேனனுக்கும் இடையே நிறைய மன கசப்பு ஏற்பட்டது.

இருந்தாலும் வியாபாரம் ஆகிறதா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படியோ வெளியே தள்ளி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர். ஆனால் வேட்டையாடு விளையாடு 2 அப்படி இல்லை. கௌதம் மேனன் தன்னை நிரூபிப்பதற்காகவே இந்த படத்தை கையில் எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

Also Read: காதலில் ஒன்று சேராமல் போன 5 படங்கள்.. பிரித்துப் பார்த்து ஆனந்தப்பட்ட கௌதம் மேனன்

Trending News