வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அரசியல் அஸ்திவாரத்தை நங்கூரமாக போடும் விஜய்.. பிரம்மாண்ட இயக்குனரை வைத்து பார்க்கும் ஆழம்

Actor Vijay: விஜய்யின் அரசியல் வருகை எப்போது ஆரம்பிக்கும் என அவருடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கேற்றார் போல் அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்களும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

உலக பட்டினி தினத்தன்று உணவு கொடுத்தது முதல் 234 தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது வரை ஒவ்வொரு விஷயங்களும் விஜய்யின் அரசியல் நகர்வை வெளிப்படையாக காட்டுகிறது. இதனால் ஒட்டு மொத்த மீடியாக்களும் இப்போது அவருடைய செயல்பாடுகளை தான் கவனித்து வருகிறது.

Also read: வீட்டை பாதுகாக்க தெரியாத நீ, எங்கள பாதுகாக்க போறியா.? புஸ்சி ஆனந்த் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டாரா விஜய்?

இந்நிலையில் விஜய் பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார்.

இதற்கு இடையில் அவருடைய அரசியல் என்ட்ரி இருக்கும் என்றும் இதனால் அவர் சினிமாவிற்கு சிறிது காலம் பிரேக் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் ஷங்கருடன் அவர் இணைய இருப்பதும் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also read: தளபதி 68-க்கு ஆட்டம் காட்ட வரும் விடாமுயற்சி.. வட்டியும் முதலுமாக கொடுக்க தேதி குறிச்ச அஜித்

அது மட்டுமல்லாமல் இவர்கள் இணையும் இந்த படம் நிச்சயம் அரசியல் கதைகளமாகத் தான் இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன. அந்த வகையில் விஜய் தன் அரசியல் அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போடுவதற்காக ஷங்கரை வைத்து இப்படத்தின் மூலம் ஆழம் பார்க்க இருக்கிறார்.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பன் படம் வெளிவந்தது. ஆனால் அது ஒரு ரீமேக் படம் தான். அதை தொடர்ந்து தற்போது 11 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி பக்கா அரசியல் கதையோடு களமிறங்க இருக்கிறது. மேலும் இப்படம் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமா என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: விஜய்க்காக ரூட்டை மாற்றிய வெங்கட் பிரபு.. புது முயற்சியில் உருவாக்கும் தளபதி 68

Trending News