Director Bharathiraja: 80களில் உணர்வு மிகுந்த கிராமப்புற பின்னணியில் தரமான படங்களை கொடுத்ததன் மூலம் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவை கலக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அன்று முதல் இன்று வரை இவர் மூத்த கலைஞர்களுள் எல்லோருக்கும் காட்பாதர் மாதிரி இருந்து வருகிறார்.
பல ஹீரோ ஹீரோயின்களை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை வளர செய்திருக்கிறார். ஆனால் இவருடைய படத்தில் 43 வருடத்திற்கு முன் அவருடன் இணைந்த இரண்டு ஜாம்பவான்கள் இன்று வரை மறுபடியும் ஒன்று சேராமல் விரோதத்துடன் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்களை வளர்த்துவிட்ட பாரதிராஜா கோலிவுட்டிற்கு கொடுத்த அற்புதமான பாடலாசிரியர் தான் கவிஞர் வைரமுத்து. 80ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படம் மூலம் தான் வைரமுத்து அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து மூன்று ஜாம்பவான்கள் இணைந்த முதல் படம் அதுதான். அன்று முதல் இவர்கள் மூவருக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. அதன் பின் இளையராஜாவும் வைரமுத்துவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கிட்டத்தட்ட 6 வருடங்களாக இவர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள். மேடைகளில் பேசும்போது வார்த்தையிலேயே மாறி மாறி தாக்கி பேசுகிறார்கள்.
இவர்களுக்குள் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்றால், அவர்களிடம் இருக்கக்கூடிய ஈகோ தான். திறமை இருக்க கூடிய இருவர் ஒரே இடத்தில் இருந்தால் பிரச்சனையில் தான் முடியும். அதுதான் இளையராஜா, வைரமுத்து இடையே ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருள் யார் பெரியவர்? யாருடைய பேச்சை யார் கேட்க வேண்டும்? என்ற கருத்து வேறுபாட்டால்தான் பிரிந்து விட்டனர்.
அதிலும் முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற ‘பூங்காத்து திரும்புமா’ பாடலில் இடம்பெற்ற ‘மெத்தைய வாங்குன தூக்கத்த வாங்கல’ வரியை வைரமுத்து ரசித்து எழுதி இருக்கிறார். ஆனால் அந்தப் பாடல் வரி தனக்கு பிடிக்கவில்லை என அதை இளையராஜா நீக்க சொன்னதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தற்போது வரை ஒட்டாமல் இருக்கக்கூடிய இரண்டு துருவங்களாக இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க பாரதிராஜா படாத பாடுபடுகிறார்.