ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லியோவுக்கு எண்டு கார்டு போட்டதும் விடாமுயற்சிக்கு விடிவு காலம்.. 4 இடத்தை குறிவைத்த அஜித்

Actor Ajith in Vidamuyarchi Movie: அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருடைய விடாமுயற்சி படத்திற்கான பிள்ளையார் சுழியை ஆரம்பித்து வைத்தார். ஆனால் அது போட்ட நேரமோ என்னமோ ஒவ்வொரு பிரச்சனைகளாக வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகிய நிலையிலும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் தற்போது தான் அதற்கு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. அதுவும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான், விடாமுயற்சிக்கு நல்ல காலம் பிறக்கும் என்று இருந்திருக்குமோ என்னவோ. ஏனென்றால் அந்தப் பக்கம் விஜய் லியோ படத்திற்கு எண்டு கார்டு போட்டு விட்டார்.

Also read: தளபதி 68-க்கு ஆட்டம் காட்ட வரும் விடாமுயற்சி.. வட்டியும் முதலுமாக கொடுக்க தேதி குறிச்ச அஜித்

அதன் பிறகு தான் அஜித் விடாமுயற்சி படத்தை துவங்க இருக்கிறார். ஒரு வழியாக படத்தை ஆரம்பிப்பதற்கு டேட் பிக்ஸ் பண்ணி விட்டார்கள். இனிமேல் விடாமுயற்சி படம் ஒவ்வொரு விஷயமாக விஸ்வரூபம் எடுத்து வரப்போகிறது. இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு போல் இவருடைய ரசிகர்கள் குதூகலமாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க இருக்கிறது. அதற்காக இயக்குனர் மகிழ் திருமேனி பல லொகேஷன்களை பார்த்து அஜித்திடம் சொல்லி இருக்கிறார். அதில் அஜித் நான்கு இடத்தை மட்டும் குறி வைத்து அவருடைய சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார்.

Also read: கேஜிஎஃப் இயக்குனரை கூப்பிட்ட அஜித்.. அப்ப கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் சேர போவது உறுதி.!

அந்த வகையில் மலேசியா, ஹைதராபாத், ஆந்திரா மற்றும் சென்னை இந்த இடங்களுக்கு மட்டும் அஜித் சம்மதம் கொடுத்திருக்கிறார். இனிமேல் என்ன ஒவ்வொன்றாக படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கப் போகிறார். இதில் அஜித்தின் ஒரு உள்நோக்க திட்டமும் இருக்கிறது. அதாவது படப்பிடிப்பை ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே லியோ படம் திரையரங்குகளில் வர இருக்கிறது.

அதற்கான வரவேற்பை பார்த்து அதற்கேற்ற மாதிரி இவருடைய படத்தில் சில மாற்றங்களை செய்து ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு திட்டத்தையும் போட்டு வைத்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இந்த வருஷத்துக்கான ட்ரீட் ரசிகர்களுக்கு கொடுக்கப் போகிறது லியோ படம் தான்.

Also read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

Trending News