வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லியோ மோடுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி.. காஷ்மீரில் இருந்து வெளியான குளுகுளு போட்டோ

Leo- Janani: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அர்ஜுன், சஞ்சய் தத் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் விஜய் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. அதில் தற்போது பிஸியாக இருக்கும் லோகேஷ் விரைவில் அடுத்த கட்ட பணிகளை தொடங்குவதற்காக வெளிநாட்டுக்கும் பறக்க இருக்கிறார். மேலும் தற்போது காஷ்மீரில் சில காட்சிகளை அவர்கள் படமாக்கி வருகின்றனர்.

Also read: 10 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு நடந்த அதே சம்பவம்.. இப்போது பனையூரிலும் விஜய்க்கு நிகழ்ந்திருக்கிறது

அதில் பிக்பாஸ் புகழ் ஜனனி நடிக்கும் காட்சிகளும் இருக்கிறது. அதற்காக அவர் இப்போது காஷ்மீருக்கு பறந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்டுள்ள போட்டோக்கள் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் ஜனனி முற்றிலுமாக லியோ மோடுக்கு மாறி இருப்பது நன்றாகவே தெரிகிறது.

அந்த வகையில் காஷ்மீர் குளிரை தாங்கும் வகையிலான உடையை அணிந்திருக்கும் அவர் குளுகுளு பிரதேசத்தில் ஜில்லென்று காட்சியளிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

Also read: லியோ படத்தை இன்னும் மெருகேற்ற களமிறங்கும் விஜய்.. 1000 கோடி வசூல் கன்ஃபார்ம் தான் போல

கொஞ்சி கொஞ்சி பேசும் இவருடைய தமிழை கேட்கவே சிலர் நிகழ்ச்சியை பார்த்ததும் உண்டு. ஆனால் போகப் போக இவருடைய நடவடிக்கைகள் சில வெறுப்புகளை சம்பாதித்தது. இருந்தாலும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் தான்.

அதிலும் விஜய்க்கு மகளாக இவர் நடிக்கிறார் என்பது பல நடிகைகளுக்கும் பொறாமையை வரவழைத்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த போட்டோவே படத்தின் மீதான ஒரு ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதன் மூலம் ஜனனி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்ற கருத்துகளும் குவிந்து வருகிறது.

லியோ மோடுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி

janani-leo
janani-leo
- Advertisement -

Trending News