திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசை விட 5 மடங்கு வியாபாரம்.. வியக்க வைக்கும் லியோ ஓவர்சீஸ் விவரம்

Leo Movie Update: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்திருக்கிறது. வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் விரைவில் புரமோஷன் பணிகளை துவங்க பட குழு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்பே தாறுமாறாக வியாபாரம் ஆகி வருகிறது. அதிலும் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் வெளிநாடுகளிலும் பட்டய கிளப்பி இருக்கிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை விட இந்த படத்திற்கு ஐந்து மடங்கு அதிகமான தொகையை கொடுத்து ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றி இருக்கின்றனர்.

Also Read: சர்வதேச அளவில் மிரட்டப் போகும் 3 இயக்குனர்கள்.. மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்த லோகேஷ்

விஜய் மற்ற படங்களை காட்டிலும் லியோ படத்தின் பிசினஸில் அதிக கவனம் செலுத்துகிறார். அதிலும் ஓவர்சீஸை பொறுத்தவரை இதற்கு முன்பு வெளியான வாரிசு படம் 30 கோடி பிசினஸ் ஆனது. ஆனால் லியோ 150 கோடி ஓவர்சீஸில் மட்டும் பிசினஸ் ஆகியிருக்கிறது. முதலில் ஒரே நபருக்கு படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கொடுத்த விஜய், இந்த முறை நான்கு பேருக்கு தனித்தனியாக பிரித்து கொடுத்திருக்கிறார்.

UK,US, மலேசியா, சிங்கப்பூர் என தனித்தனியாக லியோ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பிரித்துக் கொடுத்ததால் வேற லெவலுக்கு பிசினஸ் ஆகி இருக்கிறது. இதற்கு முன்பு விஜய்யின் பிகில் திரைப்படம் ஓவர்சீஸ் மட்டும் 95 கோடியை கொடுத்தது. அதன் பிறகு வந்த வாரிசு கொடுக்கவில்லை.

Also Read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

அதை தாண்டிய வசூல் லியோ படத்திற்கு தான் இருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கை உடன் இந்த படத்தை வாங்கி இருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் ஒரே ஒரு ஆடியோ லாஞ்சை மட்டும் இங்கு நடத்துங்கள் என்று அழுத்தமாக கேட்கின்றனர் .

விஜய்யும் உலக அளவில் இப்போது இருப்பதை விட மேலும் பேமஸ் ஆக வேண்டும் என, லியோ ஆடியோ லான்ச்சை வெளிநாட்டில் நடத்துவதற்கான டிஸ்கஷனில் இருக்கிறார். எனவே தமிழகத்தில் மட்டுமல்ல ஆல் ஏரியாவிலும் விஜய் கில்லி தான் என இந்த விஷயத்தை அறிந்ததும் தளபதி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: லியோ படத்தை இன்னும் மெருகேற்ற களமிறங்கும் விஜய்.. 1000 கோடி வசூல் கன்ஃபார்ம் தான் போல

Trending News