2 வாரத்தைக் கடந்தும் மவுசு குறையாத மாமன்னன்.. ஒட்டுமொத்தமாக இத்தனை கோடியா.!

Maamannan Movie Collection : அமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இனி முழு அரசியல்வாதியாக மாற வேண்டும் என கடைசி கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்து ரிலீஸ் செய்தார். அவர் எதிர்பார்த்ததை போலவே இந்த படம் கோலிவுட்டையே வியக்க வைக்கும் அளவுக்கு தாறுமாறான வசூலை குவித்து கொண்டிருக்கிறது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி ரிலீசான மாமன்னன் படத்தில் சாதி ஏற்றத்தாழ்வை பற்றி பேசியதால் ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்ட்களை குவித்தாலும், அந்த படத்தில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதை, பார்ப்பதற்காகவே திரையரங்கில் குவிக்கின்றனர்.

மாமன்னன் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை 65 கோடி வசூலை குவித்திருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 50 கோடியையும், வெளிநாடுகளில் 15 கோடியையும் மாமன்னன் அசால்டாக வசூலித்துள்ளது. இதுவரை உதயநிதியின் நடிப்பில் வெளியான படங்களில் எந்த படமும் இந்த அளவுக்கு வசூலை பெறவில்லை.

கடைசியாக தரமான சம்பவத்தை செய்ய நினைத்த உதயநிதிக்கு மாமன்னன் தேசிய விருதை கூட பெற்று தரும் என்றும் சோசியல் மீடியாவில் பேசுகின்றனர். இந்த படத்தில் உதயநிதி உடன் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அதிலும் வடிவேலுவின் நடிப்பு அல்டிமேட் ஆக இருந்தது. இதுவரை நகைச்சுவை நடிகராக பார்த்த வடிவேலுவை இந்த படத்தில் குணச்சித்திர நடிகராக தன்னுடைய ஒழுக்கமான நடிப்பை வெளிக்காட்டி பலரையும் திரையரங்கில் கண்ணீர் சிந்த வைத்தார்

மேலும் மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் விநியோகம் செய்வதால் புதிதாக வரும் படத்தை காட்டிலும், இந்தப் படத்திற்கு அதிக ஸ்கிரீனிங் ஒதுக்கப்பட்டு திரையிட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்படியாவது படத்தின் வசூல் 100 கோடி என காட்டி விட வேண்டும் என்ற முடிவில் உதயநிதி உறுதியாக இருக்கிறார். அது இன்னும் ஒரு சில வாரத்தில் நடந்து விடுவது போல் தெரிகிறது.