வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பெண் வேடமிட்டு சொதப்பிய டாப் 6 நடிகர்கள்.. இந்த விஷயத்தில் வடிவேலுவை அடிச்சுக்க ஆளே இல்ல

Tamil Actors Lady Getup: டாப் ஹீரோக்கள் வித்தியாசம் என்கின்ற பெயரில், தங்களது படங்களில் பெண் வேடத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த6 நடிகர்களும் போட்ட லேடி கெட்டப் பார்ப்பதற்கு கொடூரமாக இருந்தது.

சரத்குமார்: வாட்ட சாட்டமாக இருக்கக்கூடிய சரத்குமாருக்கு பெண் வேடம் என்பது சுத்தமாகவே செட்டாகாது. எல்லா நடிகர்களுக்கும் எப்படியாவது ஒரு தடவையாவது லேடி கெட்டப் போட்டு விட வேண்டும் என்ற ஆசையில் சரத்குமார் முதன்முதலாக கட்டபொம்மன் படத்தில் லேடி கெட்டப்பில் கரலாக்கட்டை போல் தோன்றினார். இந்த படத்தில் என்னதான் சரத்குமார் பெண் போல் நளினம் காட்டினாலும் சுத்தமாகவே செட்டாகவில்லை. அதன் பின்பு காஞ்சனா படத்தில் திருநங்கையாக புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்த கெட்டப் கூட ஓரளவு பார்க்கக் கூடிய அளவுக்கு இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு அவரே ஆசைப்பட்டாலும் மறுபடியும் சரத்குமாருக்கு லேடி கெட்டப்பை கொடுப்பதற்கு எந்த இயக்குனரும் தயாராகவில்லை.

லேடி கெட்டப்பில் சரத்குமார்

sarthkumar-cinemapettai
sarthkumar-cinemapettai

பிரசாந்த்: ஆணழகன் படத்தில் அழகாக அம்சமாக புடவை கட்டிக்கொண்டு தலை நிறைய மல்லிகை பூவுடன் லேடி கெட்டப் போட்டு செம ஹாட் ஆக வந்திருந்த பிரசாந்த்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அவருடைய ஹைட்டுக்கும் உடல் அமைப்பிற்கும் சூட்டாகவில்லை. இருப்பினும் பார்த்த ரசிகர்களுக்கு, ‘யப்பா எவ்வளோ பெரிய பொண்ணுடா!’ என்று வாய் மேலே விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்பட்டனர். இவர் அந்தப் படத்தில் பெண்ணைப் போலவே நெளிவு சுழிவுடன் நடிக்க முயற்சித்தாலும் மெகா சைஸ் லேடி போலவே தென்பட்டார்.

லேடி கெட்டப்பில் பிரசாந்த்

prasanth-cinemapettai
prasanth-cinemapettai

Also Read: சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

சத்யராஜ்: சினிமாவிற்கு வந்த மிகப் பெரிய சோதனை என்றால், அது சத்யராஜ் போட்ட லேடி கெட்டப் தான். மாமன் மகள் படத்தில் இவர் கருப்பு நிற உடையில் சத்யராஜ் இருக்கும் உயரத்திற்கும் அகலமான உடம்பிற்கும் அவர் போட்ட லேடி கெட்டப் கொஞ்சம் கொடூரமாகவே இருந்தது. சீரியஸாக பேசக்கூடிய டயலாக்கை கூட அந்த படத்தில் அவருடைய கெட்டப்பை பார்த்த பின் சிரிப்பு வந்துவிடும். அதன் பின்பு சந்திரமுகி கெட்டப்பில் காமெடி சீனில் லேடி கெட்டப் போட்டிருப்பார். அதிலும் ‘ரா ரா’ பாடலுக்கு காலை கையை ஆட்டிக்கொண்டு டான்ஸ் ஆடும் சத்யராஜை பார்க்கும் போது உண்மையான பரதநாட்டிய கலைஞர்கள் கதறி அழுவார்கள். அந்த அளவிற்கு மூமண்டை கொடுத்து மூச்சடைக்க வைத்திருப்பார்.

லேடி கெட்டப்பில் சத்யராஜ்

sathyaraj-cinemapettai
sathyaraj-cinemapettai

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணக்காரன் படத்தில் இடம்பெற்ற, ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்ற பாடலில் பெண் வேஷம் போட்டு ஆடினார். அந்தப் பாடலில் மீசையை மட்டும் எடுக்காமல் சிவப்பு நிற புடவையில் தலை நிறைய பூ வைத்துக்கொண்டு, அவர் அடித்த லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

லேடி கெட்டப்பில் ரஜினி 

rajini-lady-getup-cinemapettai
rajini-lady-getup-cinemapettai

Also Read: 2 வாரத்தைக் கடந்தும் மவுசு குறையாத மாமன்னன்.. ஒட்டுமொத்தமாக இத்தனை கோடியா.!

கமலஹாசன்: தமிழ் சினிமாவில் கமலை பற்றி சொல்லவே வேண்டாம், கெட்டப் போடுவதற்காகவே வரம் வாங்கி வந்த தவ புதல்வனாச்சே. அவ்வை சண்முகி, தசாவதாரம் என நிறைய படங்களில் லேடி கெட்டப்பில் பிச்சு உதறி இருப்பார். இந்த கெட்டப்பிற்காகவே அவர் முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்தாலும் பெண்ணுக்கான முகம் வரவில்லை என்று தான் சொல்லணும். இருந்தாலும் இன்னும் வருங்காலத்தில் வரும் படங்களிலும் லேடி கெட்டப் வாய்ப்பு கிடைத்தால் அதையும் செய்ய புடவையுடனும் பெண்ணுக்கான மிமிக்ரி குரலுடனும் கிளம்புவதற்கு தயாராக தான் இருக்கிறார்.

லேடி கெட்டப்பில் கமலஹாசன்

kamal-lady-getup-cinemapettai
kamal-lady-getup-cinemapettai

சியான் விக்ரம்: கந்தசாமி படத்தில் செம க்யூட்டான லேடி கெட்டப்பில் வந்திருக்கும் சியான் விக்ரம், அந்த கேரக்டருக்காகவே தன்னுடைய உடம்பையும் ஸ்லிம்மாக மாற்றி ஓரளவு செட்டானார். பொதுவாக விக்ரம் எந்த கெட்டப் போட்டாலும் அதற்காக மெனக்கிடுவார். அப்படிதான் கந்தசாமி படத்திலும் லேடி கெட்டப்பில் வந்திருக்கும் விக்ரமை பார்த்ததும் சட்டென்று ரசிகர்கள், ‘இது சியான் விக்ரம் தானே!’ என கண்டுகொள்ளும் கமெண்ட் செய்யும் அளவுக்கு இருந்தது. இந்த படத்தின் மூலம் விக்ரமுக்கு இதுவரை எல்லா கெட்டப்பையும் போட்டு பாத்துட்டோம் என்ற மனத்திருப்தி கிடைத்தது.

லேடி கெட்டப்பில் சியான் விக்ரம்

vikram-1-cinemapettai
vikram-cinemapettai

இவ்வாறு தமிழ் சினிமாவில் இதுவரை டாப் நடிகர்கள் எத்தனை விதத்தில் என்னென்ன வகையில் வேண்டுமானாலும் லேடி கெட்டப் போட்டாலும் வைகைப்புயல் வடிவேலுவின் லேடி கெட்டப் முன்னாடி, யாரும் கிட்ட கூட வர முடியாது. அந்த அளவிற்கு பெண் வேடத்திற்கு இவர்தான் சரியான ஆளு. கருகருவென இருக்கக்கூடிய இவருடைய முகத்திற்கு லேடி கெட்டப் கச்சிதமாக பொருந்தியது. அதிலும் பாட்டாளி படத்தில் வைகைப்புயல் வயசுபுள்ள கெட்டப்பில் வந்து, ‘என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..’ என அவர் சொல்லும் டயலாக் ஒவ்வொரு முறையும் கேட்கும்போது குபீர்னு சிரிப்பு வந்துவிடும். அதன் பின்பும் இவர் எத்தனையோ படங்களில் லேடி கெட்டப் போட்டு நடித்திருக்கிறார். அவையும் பிரமாதமாக இருந்தது. இன்றைக்கும் வடிவேலுக்கு பெண் வேடம்போட்டால் பழைய காலத்து பாட்டி போலவே அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

லேடி கெட்டப்பில் வடிவேலுவை அடிச்சு ஆளே இல்லை

actor-vadivelu-cinemapettai
actor-vadivelu-cineactor-vadivelu-cinemapettaimapettai

Also Read: முரட்டு வில்லனாக நடிப்பை மிரட்டிய சத்யராஜின் 5 படங்கள்.. இவருடைய கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையே

Trending News