இந்த வயசுல ஹனிமூன் சென்ற விஜய்யின் அப்பா.. 90ஸ் கிட்ஸ் சாபம் சும்மா விடாது

Actor Vijay: விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 14 வருடம் கழித்து திரிஷா இணைந்து நடித்திருக்கிறார். மேலும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது.

மேலும் அடுத்ததாக விஜய் அரசியலில் களம் காண இருக்கிறார். அதற்கான வேலைகளில் தற்போது இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் விஜய்யின் படத்தில் தந்தையாக நடித்த ஒருவர் 57 வயதில் ஹனிமூன் கொண்டாடி கொண்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் கில்லி. இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்திருந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹிந்தியில் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் விக்ரமின் தில் படத்திலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆஷிஷ் வித்யார்த்தி நடிகை சகுந்தலாவின் மகள் ராஜேஷ் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் சில பிரச்சனை ஏற்படவே ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

57 வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்று இருக்கிறார். அங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது மேலும் இதை பார்த்த ரசிகர்கள் 90ஸ் கிட்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

57 வயதில் திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி

ashish-vidyarthi
ashish-vidyarthi

கில்லி படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி

ashish-vidyarthi
ashish-vidyarthi