காமெடியன் வேறு, ஹீரோ வேறு என்பதை நிரூபிக்கும் விதமாக படங்களை ஏற்று நடித்த பிரபலங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றிருப்பார்கள். அந்த அளவுற்கு, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்கள்.
மேலும் படத்தில் தான் மேற்கொண்ட கேரக்டராகவே படம் முழுக்க டிராவல் செய்திருப்பார்கள். அவ்வாறு சீரியஸ் கேரக்டரில் நடித்து அசத்திய டாப் 5 பெஸ்ட் காமெடியன்களை பற்றிய தகவலை இங்கு பார்ப்போம்.
Also Read: தேரை இழுத்து தெருவில் விட்டு ஐஸ்வர்யா.. கண்மூடித்தனமாக நம்பி தண்டனை அனுபவிக்கும் கண்ணன்
விவேக்: செந்தில்- கவுண்டமணிக்கு நிகராய் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர் விவேக். இவர் நடித்த எண்ணற்ற படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்று இருக்கிறார். அவ்வாறு தான் நடித்த படங்களின் மூலம் தத்துவத்தை உணர்த்தும் விதமாய் காமெடிகளை வெளிகாட்டியவர். அப்படிப்பட்ட காமெடியன் வெள்ளை பூக்கள் என்னும் படத்தில், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதியை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் சீரியஸான கெட்டப்பில் அசத்திருப்பார்.
வடிவேலு: இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு நடிப்பாலும், முகத் பாவனையாளும் சிறிவர் முதல் பெரியவர் வரை சிரிக்க வைக்கும் சிறந்த காமெடியனாய் வலம் வந்தவர். அவ்வாறு இருக்க, இவர் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் மாமன்னன். இப்படத்தின் கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னடிப்பினையும், தோற்றத்தையும் வெளிகாட்டி அசத்திருப்பார்.
சூரி: தன் நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து,அதன் பின் பரோட்டா காமெடி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து சிறந்த நகைச்சுவை நடிகராய் வலம் வந்தார். அவ்வாறு பிரபலங்களுடன் இணைந்து இவர் கலக்கிய நகைச்சுவை படங்கள் ஏராளம். அவ்வாறு இருப்பின், சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் ஹீரோ கதாபாத்திரம் ஏற்று, தன்னிடம் இருக்கும் திறமையை வெளிக்காட்டிருப்பார்.
யோகி பாபு: ஆரம்பத்தில் தன் முக பாவனைக்கும், தோட்டத்திற்கும் ஏற்ற வாய்ப்பை தேடி வந்த நிலையில் மக்கள் இவரை நகைச்சுவை நடிகராக ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு இவர் நடிப்பில் வெளிவந்த கூர்கா, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து வேறு பரிமாணத்தில், ஹீரோ கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் மண்டேலா. தன் ஒரு ஓட்டிருக்கு இவர் போட்ட கொள்கை அந்த ஊரை ஒன்று சேர்க்கும் விதமாய் கதை அமைந்திருக்கும். படம் முழுக்க இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
Also Read: தலைவர் 170-க்கு தயாராகும் சூப்பர் ஸ்டார்.. புத்துணர்ச்சிக்காக சென்ற ட்ரிப், வைரலாகும் புகைப்படம்
கோவை சரளா: குணச்சித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்டவர் கோவை சரளா. தான் ஏற்கும் கதாபாத்திரம் எதுவாயினும், அதே போல் மாறி அசத்தும் வல்லமை கொண்டவர். மேலும் தான் ஏற்ற எண்ணற்ற படங்களில், சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். அவ்வாறு இருக்க, சமீபத்தில் செம்பி படத்தில், முதுமை கதாபாத்திரம் ஏற்று, தன் பேத்திக்கு ஏற்பட்ட துயரத்திற்கு நியாயம் கேட்கும் விதமாய் நடித்திருப்பார். அவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.