Director Bhagyaraj: பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவரின் எதார்த்தமான கதை அம்சம் இவருக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தது. அவ்வாறு இருக்க, இவரால் அலைக்கழிக்கப்பட்ட நடிகர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.
சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த இவர் தன்னை ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் மற்றும் எழுத்தாளராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஆன கிழக்கே போகும் ரயில், புதிய பறவைகள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு போன்றவை வெற்றி கண்டது.
Also Read: மாயாஜாலத்தை வைத்து வித்தை காட்டி 5 படங்கள்.. லாஜிக் இல்லாமல் வந்த புலி
மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஆன ஒரு கைதியின் டைரி, டார்லிங் டார்லிங் டார்லிங், சின்ன வீடு மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அவ்வாறு தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்த அந்த காலகட்டத்தில் இவரிடம் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார் லிவிங்ஸ்டன்.
அப்பொழுது, நீ எனக்கு அசிஸ்டன்ட் ஆகணும்னா அதற்கு ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும் என சொல்லி தட்டி கழித்து இருக்கிறார். அதற்கு லிவிங்ஸ்டன்னும் நான் காத்திருக்கிறேன் என கூறினாராம். அதைத்தொடர்ந்து வாய்ப்புக்காக இவரை பின் தொடர்ந்திருக்கிறார் லிவிங்ஸ்டன்.
Also Read: சீரியஸ் கேரக்டரில் அசத்திய 5 காமெடியன்ஸ்.. ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த சூரி
மேலும் இவரின் இத்தகைய போக்கை, வீட்டில் பார்த்து கண்டித்து உள்ளார்கள். ஒரு காலகட்டத்தில் இவரின் அப்பா இவரை வீட்டை விட்டு துரத்தி விட்டாராம். அதன்பின் செய்வது அறியாது வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். மேலும் இவரின் முக பாவனைக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க வில்லையாம்.
மேலும் செய்வது அறியாது பாக்யராஜ் இடமே சென்று எனக்கு வாய்ப்பு தரீங்களா இல்லையா. இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ளவா என கேட்டிருக்கிறார். ஏய் என்ன இப்படி சொல்கிறாய் என ஆறுதல் கூறி அதன் பின் தன் அசிஸ்டெண்டாக வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவ்வாறு மூன்று வருடத்திற்கு பிறகு பாக்யராஜின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினாராம் லிவிங்ஸ்டன். அதன்பின் தான் இவர் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், நடிகராகவும், காமெடியனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாராம்.
Also Read: நல்லா இருந்த குடும்பத்தில் கும்மியடித்த ஹீரோ.. நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கிய சம்பவம்