புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

90ஸ் கிட்ஸை கதி கலங்க வைத்த 6 பேய் படங்கள்.. ரெண்டு நாள் காய்ச்சலில் அவஸ்தப்பட வைத்த மைக் மோகன்

Horror Movies: இந்த காலத்தில் வருகிற முனி, காஞ்சனா, சந்திரமுகி இதெல்லாம் என்ன படம். 90களில் வெளிவந்த பேய் படங்கள் எல்லாம் கொஞ்சம் போய் திரும்பிப் பாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பீதியை கிளப்பிய நிறைய படங்கள் இருக்கிறது. அந்த படங்கள் இப்பொழுது கூட தனியாக இருந்து யாரும் பார்க்க முடியாது. அந்த படத்தை பார்த்துவிட்டு இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் பயத்தில் உச்சா போக வைத்த நிறைய படங்கள் இருக்கிறது. அதில் சில ஆறு படங்களை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

ஜென்ம நட்சத்திரம்: தக்கலி சீனிவாசன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது ஆஸ்பத்திரியில் ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு பிரசவ வலி வரும். அப்பொழுது ஒரு அம்மாவின் குழந்தை இறந்துவிடும், அதே நேரத்தில் இன்னொரு அம்மாவுக்கு குழந்தை பிறந்ததும் அந்த அம்மா இறந்து போய் விடுவார். அப்பொழுது அந்த இறந்த குழந்தைக்கு பதிலாக உயிரோடு இருக்கும் குழந்தையை மாற்றி வைத்து தன்னுடைய குழந்தையாக வளர்த்து வருவார்கள். ஆனால் போகப் போக இந்த குழந்தை பேயாக மாறிக்கொண்டு செய்யும் விஷயங்கள் தான் கதி கலங்க வைக்கும்.

Also read: கௌதமி கமலுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. துணிச்சலுடன் சர்வ சாதாரணமாக நடித்த அந்தப் படம்

அதிசய மனிதன்: வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கௌதமி, அஜய் ரத்னம், ஆனந்த், குயிலி, கோவை சரளா மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது என்பதால் வெறிபிடித்து போய் பலரையும் கொலை செய்யும். இவரிடம் இருந்து கௌதமி எப்படி தப்பித்து இவரை சுற்றி இருப்பவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் திகில் நிறைந்த படமாக இருக்கும்.

13 நம்பர் வீடு: 1990 ஆம் ஆண்டு குழந்தை என்பவர் இப்படத்தை இயக்கினார். 90களில் பயங்கரமான திகில் படம் என்றால் அனைவருடைய ஞாபகத்துக்கு முதலில் வருவது 13ம் நம்பர் வீடு தான். 13 வது நம்பர் வீட்டுக்கு அண்ணன் தம்பிகள் குடும்பத்துடன் சேர்ந்து குடி போவார்கள். அதன் பின் அங்கு இருக்கும் மர்ம நபர்களால் ஏற்படும் சம்பவங்கள் பார்ப்பதற்கு பயத்தில் குலையை நடுங்க வைக்கும்.

Also read: எம்ஜிஆர், சிவாஜியால் கிடைத்த புகழ்.. லட்சியத்திற்காக உதறி தள்ளிய நடிகை

மைடியர் லிசா: 1987 ஆம் ஆண்டு வெளியான பேய் படம். இந்தப் படம் எல்லா பேய் படங்களுக்கும் உச்சகட்ட படம் என்றே சொல்லலாம். கதாநாயகனாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி இவருடைய காதலில் லிசாவை வெளிநாட்டிலிருந்து கூட்டிட்டு வந்து ஒரு வீட்டில் தங்க வைத்திருப்பார். பிறகு அங்கே நடந்த வன்கொடுமையால் லிசா மரணம் அடைந்து விடுவார். அடுத்து நிழல்கள் ரவி வேறொரு திருமணம் செய்து கொள்வார். அந்த லிசா இவருடைய மனைவி உடம்பில் புகுந்து இவர் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்கும் விதமாக திகிலாக கதை அமைந்திருக்கும்.

வா அருகில் வா: கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வா அருகில் வா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரம்யா கிருஷ்ணன், ராஜா, வைஷ்ணவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ராஜாவின் மனைவியாக வைஷ்ணவி நடித்திருப்பார். ஆனால் அவரை மாமியார் கொடுமை செய்து கொலை செய்து விடுவார். பிறகு இவருடைய ஆவி அந்த வீட்டில் இருக்கும் ஒரு பொம்மைக்குள் புகுந்து அந்த குடும்பத்தில் இருப்பவர்களை பழிவாங்கும் விதமாக பயங்கரமாக இருக்கும்.

உருவம்: ஜி எம் குமார் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு உருவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், பல்லவி, ஜெயமாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இரண்டு வேடத்தில் மோகன் நடித்திருப்பார். அதில் ஒரு மோகன் சூனியம் வைத்து அந்த குடும்பத்தில் இருப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மந்திரத்தையும் வைத்து பேயாக மாறி இவருடைய நடிப்பை அதிர வைத்திருக்கார். முக்கியமாக இந்த படத்தை தனியாக பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பீதியை கிளப்பி விடும்.

Also read: பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. என்னோட குரு என அந்தர் பல்டி அடித்த இந்துஜா

Trending News