Best 5 heroine characters: இன்றைய காலகட்ட சினிமாவில் ஒரு படத்திற்கு கதாநாயகி என்பது கவர்ச்சி காட்சிகளுக்காக மட்டுமே என்று நிறைய இயக்குனர்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சில இயக்குனர்கள் அவர்கள் இயக்கும் படத்தின் கதாநாயகிகளை அந்தக் கதையின் மைய புள்ளியாக வைத்து இயக்குவதோடு, ரொம்பவும் எதார்த்தமாக நடிக்கும் நடிகைகளை தேர்ந்தெடுத்தும் நடிக்க வைக்கிறார்கள். இந்த ஐந்து படங்களில் வரும் ஹீரோயின் கேரக்டர்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவதாக அமைந்திருக்கிறது.
குட் நைட் – அனு: சமீபத்தில் சமூக வலைத்தளம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும் கேரக்டர் என்றால் அது குட் நைட் படத்தின் அனு கேரக்டர் தான். ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற மணிகண்டன் ஹீரோவாக நடித்த குட் நைட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக வரும் அனு ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் மனதை ஈர்த்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். காதல், சென்டிமென்ட், வெகுளித்தனம் என மொத்த நடிப்பையும் கொட்டி தீர்த்த இவர் நடிகை சாய் பல்லவி நினைவுக்கு கொண்டு வருகிறார்.
Also Read:முதல் இரவில் குறட்டை விட்டு தூங்கிய மணிகண்டன்.. கலக்கலான காமெடி உருவான குட் நைட்
பிரேமம்- மலர் : மலையாளத்தில் ரிலீஸ் ஆகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் பிரேமம். இந்த படத்தில் நிவின் பாலி நடித்த ஜார்ஜ் கேரக்டருக்கு எந்த அளவுக்கு பெண் ரசிகைகள் இருந்தார்களோ அதைவிட 100 மடங்கு அதிக ஆண் ரசிகர்கள் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு வரவேற்பளித்தார்கள். ஒப்பனை இல்லாத முகத்தோற்றம், காட்டன் புடவை என ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடிக்க வைத்து விட்டார்.
மயக்கம் என்ன – யாழினி: வாழ்க்கையில் தனக்கு பிடித்த விஷயத்தை விரும்பி செய்ய நினைக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு துணை கூட இருக்க வேண்டும் என நினைக்க வைத்த கேரக்டர் மயக்கம் என்ன படத்தில் வரும் யாழினி. எந்த ஒரு சூழ்நிலையிலும் கலங்கி நிற்கும் தன் கணவனுக்காக தைரியமாக தோள் கொடுக்கும் பெண்ணாக படம் முழுக்க இவர் வாழ்ந்திருப்பார்.
சூரரை போற்று – பொம்மி: நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியையும், அடையாளத்தையும் கொடுத்த திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு சமமான கேரக்டரில் நடித்திருப்பார் அபர்ணா பாலமுரளி. காதலில் திளைப்பதாக இருக்கட்டும், கணவனுக்கு உறுதுணையாக இருக்கட்டும் இந்த படத்தில் வரும் பொம்மி கேரக்டர் போல் வாழ்வில் ஒரு மனைவி அமைய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இறுதிச்சுற்று – மதி: தமிழில் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் மாதவனுக்கு வெற்றி படமாக அமைந்தது தான் இறுதிச்சுற்று. இதில் வரும் மதி கேரக்டர் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கேரக்டராக இருந்தது. அழகு, வீரம், காதல் என ஒவ்வொரு காட்சிகளிலும் ரித்திகா சிங் தன்னுடைய நடிப்பில் மிளிர்ந்திருப்பார்.