புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்ட பிக்பாஸ் விக்ரமன்.. போட்டோ ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய காதலி

Biggboss Celebrity: விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி விரைவில் 7வது சீசனில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் பிரபலம் அடைந்த ஒருவரை பற்றி வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் விக்ரமன். சொல்லப்போனால் இவர் தான் டைட்டிலை வெல்வார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இவருடைய கண்ணியமும், நேர்மையும் தான். ஆனால் அது அத்தனையும் பொய் என்று நினைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Also read: பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

அதாவது விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அந்த பெண்ணிடம் விக்ரமன் 12 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இது பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் விக்ரமனுடன் இணைந்திருக்கும் போட்டோ மற்றும் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் ஆகியவற்றையும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை மட்டுமல்லாது அவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி ஏமாற்று வேலை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also read: லியோ மோடுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி.. காஷ்மீரில் இருந்து வெளியான குளுகுளு போட்டோ

இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மீது மரியாதை கொண்டவராகவே விக்ரமன் வலம் வந்தார். அவருடைய அந்த கண்ணியம் தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புகார் அவருடைய உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்ட விக்ரமனின் முகத்திரையை அவரது காதலி கிழித்துள்ளது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஆனால் சில ரசிகர்கள் இதை நம்ப மறுத்து விக்ரமனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

காதலியுடன் பிக்பாஸ் விக்ரமன்

vikraman-bigboss
vikraman-bigboss

Trending News