Actor Vijay: பொதுவாக சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஏனென்றால் ஒரு நாட்டை ஆளப்போகுபவர் எல்லோருக்குமே பரிச்சயமாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் சினிமாவை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் இதன் மூலம் தான் எல்லோரிடமும் எளிதில் சென்று விட முடியும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கான எல்லா விஷயங்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இரவு குழந்தைகள் படிப்பதற்காக பாடசாலை திறக்க உள்ளதாக அறிவித்தனர்.
இவ்வாறு இளைய சமுதாயத்திற்கு விஜய் நன்மைகள் செய்வது நல்ல விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் ஒரு சின்ன துரும்பை நகற்றினாலும் அது மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் என்று கூட சொல்லலாம்.
ஆனாலும் விஜய் செய்யும் ஒவ்வொரு உதவிகளையும் அடுத்த நிமிஷமே, இது எப்புட்றா என்று ஆச்சரியமாக கேட்கும்படி தளபதியின் விஸ்வாசிகள் பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். அதாவது நாடோடிகள் படத்தில் சின்னமணி ஒரு விஷயம் செய்த உடனே போஸ்டர் அடித்து ஓட்டுவாரோ அதே ஸ்டைலை தான் தளபதி ரசிகர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் உலக பட்டினி தினத்தன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல இடங்களில் உணவு வழங்கியிருந்தனர். இதை பப்ளிசிட்டி செய்யும் விதமாக போஸ்டர், பேனர் என விஜய் விசுவாசிகள் அசத்தி விட்டனர். இதை விட கொடுமை என்னவென்றால் மக்கள் ஒரு கையில் உணவு என்றால் மற்றொரு கையில் விஜய்யின் புகைப்படத்தை வைத்திருந்தார்கள்.
ஒரு விஷயத்தை செய்கிறோம் என்று கூட தெரியாமல் இப்படி பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். மேலும் பல வருடங்களாக உலக பட்டினி தினம் வருகிறது, அதே போல் மாணவர்களும் நிறைய மதிப்பெண்கள் தான் எடுத்து வருகிறார்கள். இப்போது மட்டும் இதை பெரிய அளவில் விஜய் செய்வதற்கான காரணம் அரசியல் வருகைக்காக தான் என்று பலரும் சாடி வருகின்றனர். இப்போது விஜய்யும் முழு அரசியல்வாதியாகவே மாறிவிட்டனர் என கருத்து தெரிவித்துள்ளனர்.