சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சமீபத்தில் ஓடிடி-யில் அதிகமாக பார்க்கப்பட்ட 5 படங்கள்.. தீரா காதல் மூலம் மார்க்கெட்டை பிடிக்கும் ஜெய்

Actor Jai: சிறந்த கதை கொண்ட படங்கள் திரையில் வெளிவந்தாலும் சரி இல்லை ஓ டி டி தளத்தில் வந்தாலும் சரி அதற்கு கிடைக்கக்கூடிய வெற்றி கண்டிப்பாக மக்களிடம் கிடைக்க தான் செய்கிறது. அவ்வாறு சமீப காலமாக ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஃபர்ஹானா. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். செல்வராகவனின் பிளாக் மைலால்,ஃபர்ஹானா எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் சோனி லைப் என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: ஒரு தலை காதலால் தற்கொலை முயற்சி செய்த ஹீரோயின்.. இந்த நடிகருக்கு இப்படி ஒரு போட்டியா!

தண்டட்டி: இப்படத்தில் பசுபதி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கிராமம் தழுவிய கதை அம்சம் கொண்ட படமாய் அமைக்கப்பட்டிருக்கும். இறந்த பின்பு ஒரு ஜோடி காதணியை கண்டுபிடிக்கும் எதார்த்தமான காவலர் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார். இருப்பினும் கிளைமாக்ஸ் இல் பெரிதளவு சுவாரஸ்யம் இல்லாமல் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.

தீரா காதல்: ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீரா காதல். இப்படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். திருமண மேற்கொண்டவர் தன் முன்னாள் காதலியை சந்தித்த பின்பு ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படம் ஜெய்யின் ரீ என்ட்ரி படமாக பார்க்கப்படுகிறது.

Also Read: சூப்பர் ஸ்டார் பெயர தூக்க போட்டி போட நினைக்கும் நாலு பேரு இவர்கள் தான்.. ஹுக்கும் பாடலால் வெடிக்கும் சர்ச்சை

போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் போர் தொழில். இப்படத்தில் சரத்குமார், அசோக்செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் அனுபவம் இல்லாத காவலராய் அசோக் செல்வனும், அனுபவம் வாய்ந்த காவலராய் சரத்குமாரும் இணைந்து மர்மமான முறையில் இறக்கும் பெண் குழந்தைகளை பற்றி புலனாய்வு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

2018: மலையாள மொழி படங்களில் இப்படம் சுமார் 200 கோடி வசூலை பெற்று தந்து, மலையாள சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது. இயற்கை பேரழிவை சார்ந்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தில் டோவிநோ தாமஸ், அபர்ணா பால முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நல்ல ரேட்டிங் ஆன 8.5 /10 பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா

Trending News