சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்.. இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் காண்ட்ராக்டர் நேசமணி

5 Best Comedy Movies: ஒரு படம் முழுக்க காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று வந்தால் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டி விடும். அதுவே முழுக்க, முழுக்க காமெடி திரைப்படம் என்றால் வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு இரண்டரை மணி நேரம் முழுக்க படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். கொஞ்சம் சொதப்பினாலும் படம் பிளாப் ஆகிவிடும். இந்த ஐந்து இயக்குனர்கள் இதில் வெற்றி கண்டு, படத்தை சூப்பர் ஹிட் ஆக்கி இருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காம்போவில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அத்தனை காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இவர்கள் இருவரும் உயிரைக் கொடுத்து பேசும் வசனங்களை, தன்னுடைய ரியாக்சனாலேயே கவுண்டர் கொடுத்து காலி பண்ணி இருப்பார் சத்யராஜ். படம் தொடங்கி முடியும் வரை அத்தனை காட்சிகளுமே ரசிகர்களின் ஃபேவரைட் தான்.

Also Read:சமீபத்தில் ஓடிடி-யில் அதிகமாக பார்க்கப்பட்ட 5 படங்கள்.. தீரா காதல் மூலம் மார்க்கெட்டை பிடிக்கும் ஜெய்

வசூல் ராஜா MBBS: ஒரு தாதா தன் அப்பாவின் நண்பரிடம் விட்ட சவாலுக்காக டாக்டராக மாற வேண்டும் என மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அங்கு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொன்ன படம் இது. கிரேசி மோகன் வழக்கமான வசனங்களால் ஒவ்வொரு காட்சியும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது.

கலகலப்பு: சுந்தர் சி என்றாலே மசாலா திரைப்படங்களுக்கு பேர் போனவர். அதிலும் அவருடைய படங்களில் எப்போதுமே நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். விமல், மிர்ச்சி சிவா, சந்தானத்தின் காம்போவில் இவர் இயக்கிய கலகலப்பு திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் ஆன ஒன்று. அதிலும் ஒரு காட்சியில் வரும் அமிதாப் மாமா என்னும் வசனம் இன்று வரை சமூக வலைத்தளத்தில் பிரபலமாக உள்ளது.

Also Read:80, 90களில் பெண்களை மையப்படுத்தி எடுத்த 5 படங்கள்.. பிரகாஷ்ராஜ் மூக்கை உடைத்த கல்கி

பிரண்ட்ஸ்: 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் திரைப்படம் ஆக இருப்பது பிரண்ட்ஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படுகிறது. கான்ட்ராக்டர் நேசமணியாக வரும் வடிவேலு மற்றும் கோபாலு கேரக்டரில் வரும் சார்லியின் காம்போவில் ஒவ்வொரு காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

பஞ்சதந்திரம்: தமிழ் சினிமா ரசிகர்களின் சிரிப்பு மெடிசனாக இருக்கும் திரைப்படம் தான் பஞ்சதந்திரம். ஐந்து நண்பர்களுக்குள் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை காமெடியாக சொல்லி இருப்பார்கள். கிரேசி மோகனின் வசனம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆகிவிட்டது. வழக்கம் போல கமல் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read:முடிஞ்சா கண்டுபிடி என ட்விஸ்ட் வைத்த கமலின் 5 படங்கள்.. 34 வருடத்திற்கு முன்பே வேடிக்கை காட்டிய அப்பு

Trending News