Actor Maadhavan: நடிகர் மாதவன் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் பெண் ரசிகைகள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். இன்றுவரை மாதவனுக்கு என்று பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென கதை தேர்வில் பயங்கரமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்தார். இந்த ஐந்து படங்கள் மாதவனின் சினிமா கேரியரில் அவர் செய்த தப்பான தேர்வு என்று கூட சொல்லலாம்.
பிரியசகி: இயக்குனர் கே எஸ் அதியமான் இயக்கத்தில், மாதவன் மற்றும் சதா நடித்த பிரியசகி திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கூட்டுக் குடும்பத்தின் நன்மையை வலியுறுத்தி வெளியான இந்த படம் மாதவனுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படு மாடர்னாக இந்த படத்தை எடுக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக சொதப்பி வைத்திருந்தார்கள்.
Also Read:உதயநிதி அரசியலுக்கு அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. முதலும் கடைசியுமா வசூலை அள்ளிய மாமன்னன்
ஆர்யா: மாதவன் மற்றும் பாவனா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர்யா. இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி காட்சிகளை தவிர நினைவில் நிற்கும் அளவுக்கு எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். திமிர் பிடித்த பெண் தன் ஈகோவிற்காக ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது, பின் அந்த காதலால் திருந்துவது என அரைத்த மாவையே அரைத்து வைத்திருந்தார்கள்.
குரு என் ஆளு: இந்தியில் வெளியான எஸ் பாஸ் என்னும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் குரு என் ஆளு. இந்த படத்தின் கதையே மொத்தமாக சொதப்பலாக இருந்தது. படத்தை ஓரளவுக்கு காப்பாற்றும் விதமாக விவேக்கின் காமெடி காட்சிகள் இருந்திருந்தாலும், ரசிகர்களிடம் இந்த படம் எடுபடவில்லை.
Also Read:உண்மை கதைகளை அப்படியே கண்முன் நிறுத்திய 6 படங்கள்.. கண்கலங்க வைத்த பரியேறும் பெருமாள் BA BL
தம்பி: சாக்லேட் பாயாக தமிழ் சினிமா ரசிகைகளால் கொண்டாடப்பட்டு வந்த மாதவன் முழு ஆக்சன் ஹீரோவாக களம் கண்ட படம் தான் தம்பி. படம் முழுக்க சமூக கருத்துக்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் இப்படி ஒரு கேரக்டர் மாதவனுக்கு சுத்தமாக செட்டாகவில்லை. இதனாலேயே இந்த படம் தோல்வி அடைந்தது.
ரெண்டு: எப்போதுமே இயக்குனர் சுந்தர் சி யின் படங்கள் என்றால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான் என்ற கருத்தை முதன் முதலில் மாற்றிய திரைப்படம் தான் இந்த ரெண்டு. நடிகர் மாதவன் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில் தான் முதல் முறையாக அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். வடிவேலு, சந்தானம் என காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.