பாட்டுவரியில் சூப்பர் ஸ்டார் பெயருக்கு வந்த சோதனை.. பப்ளிசிட்டிக்காக பார்க்கும் வேலை

Superstar Rjinikanth: தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது ஜெயிலர் படத்தில், மறைமுகமாக காட்டப்படும் பப்ளிசிட்டி குறித்த தகவலை இங்கு காண்போம்.

வில்லனாகவும், முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபலம் தான் ரஜினி. இவர் படத்தில், வந்து நின்னால் மட்டுமே போதும் அப்படம் வெற்றி பெற்றுவிடும். அந்த அளவுக்கு தன் ஸ்டைலால் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அதை முன்னிட்டு, இந்து வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவர் நடிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பொதுவாக தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ பாட்டிற்கு மிகுந்த கவனத்தை காட்டுகின்றார்கள்.

தற்பொழுது அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் பாடல்களை மக்கள் பெரிதளவு எதிர்பார்ப்பது உண்டு. அவ்வாறு லியோ படத்தில் விஜய்யின் பாடல் எவ்வளவு முக்கியமாக பார்க்கப்பட்டதோ அதேபோல் அதற்கு போட்டியாக ஜெய்லர் படத்தில் வெளிவந்த செகண்ட் சிங்கிள் பல விஷயங்களை உள்ளடக்கி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி தான் சூப்பர் ஸ்டார், அவருக்கு பின் தான் எல்லாம் எனக் கூறும் விதமாய் இப்பாடல் அமைந்துள்ளது. ரஜினியின் நடிப்பை மேற்கொண்டு அவருக்கு சூப்பர் ஸ்டார் என பெயர் வைத்தார் கலைப்புலி தாணு. அதன் பின் தான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தாய் மாறினார்.

இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவ்வாறு இருக்கையில், அதை ஏன் மீண்டும் பாடலில் திணிக்க வேண்டும் என தெரியவில்லை. தன் வயதை பொறுப்பெடுத்தாது இதுபோன்ற விஷயங்களை மேற்கொள்வது பல விமர்சனங்களை முன் வைக்கிறது. மேலும் தற்போது பப்ளிசிட்டிக்காக இவர்கள் மேற்கொள்ளும் இது போன்று பாடல் வரிகளால் நீயா நானா என்ற ஈகோ தான் வளர்கிறது.