6 Directors: தன் கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்து, ஒரு கட்டத்தில் தன் உறவுகளை பிரிந்து சினிமாவில் சாதிக்கும் முயற்சியில் ஓடி வந்தவர்கள் ஏராளம். அவ்வாறு தமிழ் சினிமாவில் முயற்சித்து சாதித்த 6 பெரிய இயக்குனர்கள் பற்றிய தகவல் இங்கு காண்போம்.
சமுத்திரகனி: பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராய் சினிமாவில் தன் பணியை தொடங்கியவர் சமுத்திரகனி. இவர் அம்மா விறகு வெட்டும் தொழில் செய்பவர் அவ்வாறு இருப்பின் அவரை விட்டுவிட்டு தன் கனவை நிறைவேற்ற இயக்குனராய் மாறினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடி படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்று தந்தது. தற்போது இயக்கத்தை தவிர்த்து குணசித்திர கதாபாத்திரத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
நித்திலன்: மகாராஜா, குரங்கு பொம்மை போன்ற படங்களை இயக்கியவர் தான் நித்திலன். எதார்த்தமான கதை அம்சம் கொண்டு தன் இயக்கத்தை மேற்கொண்டு வருகிறார். இவரின் அப்பா ஆடு மேய்ப்பவர். அவ்வாறு ஏழ்மையில் இருந்த இவர் தன் திறமையை வெளிக்காட்டி, போராடி இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கணேஷ்: இவர் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கியவர் ஸ்ரீ கணேஷ். இவரின் குடும்பமும் ஏழ்மையானது. தற்பொழுது பெரிய இயக்குனராக இருக்கும் இவர் தான் பார்க்க வேண்டிய காலத்தில் தன் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளவில்லை என வருத்தப்பட்டு கொண்டே முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூடர் கூடம் நவீன்: பிளாக் காமெடி சப்ஜெக்ட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் நவீன். அவ்வாறு இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தான் மூடர் கூடம் , அக்னி சிறகுகள். இவரின் அப்பா காகித தொழிற்சாலையில் வேலை செய்பவர், அம்மா பீடி சுருட்டுபவர் இந்த வறுமையிலும் இவர் மேற்கொண்ட முயற்சிதான் தற்பொழுது இவரை இயக்குனராக மாற்றியுள்ளது.
மிஷ்கின்: சஸ்பென்ஸ் மற்றும் திகில் ஊட்டும் திரில்லர் படங்களை இயக்குபவர் மிஷ்கின். இவர் படைப்பில் யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அவ்வாறு இருக்க இவரின் அம்மா டெய்லர் அந்த கஷ்டத்திலும் இவர் மேற்கொண்ட ஆர்வத்தினால் தன் சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார்.
மாரி செல்வராஜ்: இவர் ஏழ்மை நிலையில் இருந்து, சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர். வீட்டிலிருந்து ஓடி வந்து ஆபீஸ் பாயாக வேலை செய்து அதன் பின் இவர் மேற்கொண்ட படங்கள் ஆன பரியேறும் பெருமாள், கர்ணன், தற்பொழுது மாமன்னன் போன்ற படங்களில் ஒரே சாதி கொள்கையை மேற்கொண்டு படம் இயக்கி வெற்றி கண்டு வருகிறார்.