திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஹீரோவை விட சத்யராஜ் நின்னு பேசி சாதித்து காட்டிய 5 படங்கள்.. ரோசம் புடிச்ச சிவனாண்டி செஞ்ச அக்கப்போர்

Actor Sathyaraj: சத்யராஜ் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது என்றே சொல்லலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் அடியாளாக சினிமாவிற்கு நுழைந்தவர், போகப் போக வில்லன் கேரக்டர், அதன் பின் ஹீரோ மற்றும் நகைச்சுவையின் லொள்ளு மன்னன் ஆகவும் பல பரிமாணங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது கதாபாத்திர கேரக்டரில் நடித்து சாதித்து காட்டி வருகிறார். அப்படி இவர் கேரக்டரில் நடித்து ஜெயித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

நண்பன்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ் மிகவும் கண்டிப்பானவர் மற்றும் ஒழுக்கமானவர். இதில் இவருக்கான ஒரு சில விதிமுறைகளை வகுத்து அதன்படியே அங்கு இருக்கும் மாணவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். இவருடைய கேரக்டர் வைரஸ் என்பது மக்களிடத்தில் நல்லாவே ரீச் ஆகி விட்டது.

Also read: வளர்த்து விட்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. விஜய்க்கு மண்டையில் கொட்டுவைத்து புத்திமதி சொன்ன தயாரிப்பாளர்

பாகுபலி: எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எப்படி படையப்பா என்ற பெயர் சொன்னதும் நீலாம்பரி என்ற கேரக்டர் ஞாபகத்திற்கு வருகிறதோ, அதே மாதிரி பாகுபலி என்று சொன்னாலே கட்டப்பா என்ற கேரக்டர் தான் அனைவரது நினைவுக்கும் வந்து விட்டுப் போகும். அந்த அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துக் காட்டி இருப்பார். இந்த கேரக்டருக்கு இவரை தவிர வேறு யாரு நடித்தாலும் பொருத்தமாக இருக்காது என்று சொல்லும் அளவிற்கு சத்யராஜ் கட்டப்பா கேரக்டருக்கு மிகவும் செட் ஆகிவிட்டார்.

வீட்ல விசேஷம்: ஆர்ஜே பாலாஜி மற்றும் என்ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த வருடம் வீட்ல விசேஷம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜின் லொள்ளு பழைய மாதிரி நம் அனைவரும் பார்த்து ரசிக்கும் படியாக இருந்தது. அத்துடன் வயதானாலும் ஆசைக்கும் எதிர்பார்ப்புக்கும் அளவை கிடையாது. இதை சொல்லும் விதமாக இவர் நினைத்தபடி வாழ்க்கையே சந்தோசமாக வாழ்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: 50 படங்கள் இயக்கி 34 படங்கள் சூப்பர் ஹிட்..  இதில் 15 படங்கள் சத்யராஜ் மட்டுமே நடித்த பெருமை.!

லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வருடம் லவ் டுடே திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ் தன் மகளின் காதலை வலுப்படுத்துவதற்காக, அவர்களுக்கு ஒரு வில்லங்கமான யுக்தியை போட்டியாக வைப்பார். அதாவது காதலர்களுக்குள் மொபைல் பரிமாற்றத்தை கொடுத்து அதை மிகவும் ட்ரெண்டாக்கி விட்டார். இப்படத்தில் இவருடைய குசும்பு, நக்கல், நையாண்டி அனைத்தும் நன்றாகவே இருக்கும்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 2013 இல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இவருடைய சிவனாண்டி கேரக்டர் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அத்துடன் வெளியில் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகவும் கோவக்காரனாகவும் இருப்பவர், கடைசியில் தன்னுடைய மகளின் காதலுக்காக ரோஷத்தை விட்டு அக்கப்போர் செய்த விஷயங்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது.

Also read: வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்

Trending News