திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிப்பையே உயிர் மூச்சாக கொண்ட 6 குணச்சித்திர நடிகர்கள்.. 800 படம் நடித்தும் அங்கீகாரம் கிடைக்காத கொடுமை

6 Supporting Actors: தன் திறமைக்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காதா என ஏங்கி அதன் பின் வாய்ப்பு பெற்று நடித்து வரும் பிரபலங்கள் ஏராளம். மேலும் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு, தன் நடிப்பினை வெளிகாட்டி இன்றும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் மனம் உடைந்த 6 குணச்சித்திர நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

இந்த வரிசையில் முதலில் சார்லி இவர் சுமார் 800 க்கும் மேற்பட்ட படங்களில் குணசேத்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவ்வாறு தமிழ் சினிமாவில் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் பாலச்சந்தரரால் அறிமுகமானவர். இவர் தன் வாழ்நாள் சாதனையாக சிறந்த நகைச்சுவை நடிகராய் விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்

இவரைத் தொடர்ந்து மேடை நாடக நடிகராக தன் திறமையை மேற்கொண்டு அதன் பின் சினிமாவில் வாய்ப்பு பெற்று வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் தான் பசுபதி. இவர் நடிப்பில் பெரிதாய் பேசப்பட்ட படங்கள் தான் தூள், விருமாண்டி, வெடிகுண்டு முருகேசன், வெயில். மேலும் தமிழ், மலையாளம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் குரு சோமசுந்தரம்.

பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர் போன்ற படங்களில் பெரிதாக பேசப்பட்டார். இவரைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கடலோர கவிதை படத்தில் சத்யராஜின் நண்பராய் அறிமுகமானவர் இளவரசு. இவர் மேற்கொண்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசேத்திர நடிகராகவும் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கலகலப்பு படத்தில் இவரின் காமெடி வேற லெவலில் பேசப்பட்டது.

Also Read: கிராமத்து பட கவர்ச்சியில் சொக்க வைத்த 5 நடிகைகள்.. மண் மணம் மாறாத ராதா

மேலும் இவரைத் தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம் என்னும் படத்தின் ஹீரோ தான் சரவணன். அதன்பின் சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பெரிதும் பேசப்படும் படம் தான் பருத்திவீரன்.

மேலும் இவரைத் தொடர்ந்து பன்முகத் திறமை கொண்டு இன்றும் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி வரும் பிரபலம் தான் எம் எஸ் பாஸ்கர். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. ஆயினும் இவர்கள் திறமைக்கு இதுவரை தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இவர்கள் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1000 கோடி வசூலில் இணையுமா லியோ? தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கியது போல் பதிலை சொன்ன லோகேஷ்

Trending News