ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2023-ல் நா தான் பெஸ்ட் என நிரூபித்த 8 நடிகைகள்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமத்து நடிகை

Best Heroines of 2023: ஒவ்வொரு வருடமும் இறுதியில் பல நிறுவனங்களும், விருது வழங்கும் அமைப்புகளும் அந்த வருடத்திற்கான சிறந்த நடிகைகளின் பட்டியலை வெளியிடுவது உண்டு. இது எல்லாம் பொதுமக்களின் கருத்து கணிப்பை மையமாகக் கொண்டு வெளியாவது தான். அப்படி பிரபல நிறுவனம் ஒன்று இந்த வருடத்திற்கான சிறந்த எட்டு நடிகைகளின் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது.

இந்த லிஸ்டில் எட்டாவது முறையாக நடிகை ஒருவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் நயன்தாரா தான் நம்பர் ஒன் நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் என ஒரு மாய பிம்பம் இருந்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் நயன்தாராவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்திருக்கிறது.

Also Read:நான் தான் நம்பர் ஒன் என தலையில் கொம்போடு அலைந்த நடிகை.. அழுது புலம்ப வைத்த கீர்த்தி சுரேஷ்

நடிகை அனுஷ்கா செட்டி உடல் எடை கூடியதிலிருந்து அவ்வளவாக படங்கள் எதிலும் தலை காட்டாமல் இருக்கிறார். அவருக்கு கடைசியாக அமைந்த ஹிட் படம் என்றால் அது பாகுபலி 2 தான். இருந்தாலும் ரசிகர்களின் மனதில் எப்போதுமே இவர் நிலைத்து நிற்கிறார் என்பதற்கு அடையாளமாக இந்த பட்டியலில் அவர் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் தளபதி விஜய் உடன் ஜோடி போட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே 7ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இந்த பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்திருக்கிறது. மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவர் இந்த வருடத்தின் சிறந்த நடிகைகள் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read:ஒரு வருட ஓய்வினால் பல கோடி இழக்கும் சமந்தா.. நம்பர் ஒன் இடத்திற்கு தகுதியான நடிகையின் நிலைமை

தன்னுடைய சிறந்த நடிப்பால் ஆஸ்கார் வரை சென்று வந்த தீபிகா படுகோனே இந்த லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகை ஆலியா பட் இந்த முறை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அந்த நிறுவனம் பட்டியலிட்டு இருக்கிறது. ஆலியா பட்டிற்கு அடுத்தடுத்து படங்களும் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.

2023 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான முதல் இடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மயோசைட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டே ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். சினிமாவை விட்டு ஒரு வருட காலத்திற்கு விலக போவதாக தகவல்கள் வெளியாகியும், ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இவர் தான் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக இந்த முதல் இடத்தை சமந்தா தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:நிம்மதியை தேடி ஊர் ஊராக சுற்றும் சமந்தா.. கடைசியில் சாமியாரிடம் சரணடைந்த புகைப்படம்

Trending News