திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாரு ரியல் சூப்பர் ஸ்டார் என நிரூபிக்கும் நேரம் வந்துடுச்சு.. லியோ VS ஜெயிலர் பட முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் இதுதான்

Leo Vs Jailer: சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ஒரு பெரிய வாக்குவாதமே நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தின் முதல் நாள் கலெக்சன் தான்.

அதாவது ரஜினிக்காகவே முதல் நாளில் ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி முதல் நாள் கலெக்ஷன் பெத்த லாபத்தை கொடுத்து விடுவார்கள். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடலில் சூப்பர் ஸ்டாராக நினைக்கும் நடிகர்களை பற்றி விமர்சித்து சில வரிகள் எழுதப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

Also Read : ரஜினியை ஒருமையில் பேசி வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை.. உங்க வயசுக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லையா!

இதைத்தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட வருகிறது. அதாவது முதல் நாள் கலெக்ஷனில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் வலிமை படம் இருக்கிறது. இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 36 கோடி வசூல் செய்தது.

இதற்கு அடுத்ததாக ரஜினியின் படங்களான அண்ணாத்த 35 கோடியும், 2.0 படம் 34 கோடியும் வசூல் செய்து இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளது. இந்நிலையில் நான்காவது இடத்தில் தான் விஜய்யின் சர்க்கார் படம் 32 கோடி முதல் நாள் கலெக்ஷன் செய்து இருக்கிறது.

Also Read : பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்

இந்த முறை லியோ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் கிட்டத்தட்ட 50 கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஜினியின் ஜெயிலர் படம் 40 கோடி கலெக்ஷன் செய்யும் என்று கூறப்படுகிறது. ஒரே வருடத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் நிலையில் ரஜினி தோற்றுவிட்டால் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பேசப்பட்டு வருகிறது.

இதனால் முதல் நாள் கலெக்ஷனில் அடிச்சு துவம்சம் பண்ணி விஜய் முதலிடத்தில் வருகிறாரா அல்லது ரஜினி தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்கிறாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும். ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவில் வருகிறது.

Also Read : விஜய்யின் வேகத்தை குறைத்து சமாதானப்படுத்தும் பெருந்தலைகள்.. ஆரம்ப புள்ளியோடு வைக்க போகும் முற்றுப்புள்ளி

Trending News