வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

மொத்த வெறியோடு திரியும் சூர்யா.. 14 ஆம் நூற்றாண்டை அச்சு பிசாராமல் கண் முன் நிறுத்தும் கங்குவா

Actor Suriya: சமீப காலமாய் சூர்யாவுக்கு எந்த படமும் சரிவர கை கொடுக்காத நிலையில், விக்ரம் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தன் நடிப்பின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார் சூர்யா. இந்நிலையில் தன் மொத்த வெறியோடு திரியும் சூர்யாவின் புது அவதாரம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 14 ஆம் நூற்றாண்டு காவியமாய் உருவாகும் படம் தான் கங்குவா. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்படத்தில் சூர்யா மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்ற தெறிக்க விட்டிருக்கிறார்.

Also Read: ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

அதை தொடர்ந்து இப்படத்தின் வீடியோ ரிலீஸ் ஆகி பட்டைய கிளப்பி வருகிறது. ஏற்கனவே கஜினி போன்ற கேரக்டரில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் சூர்யா. இந்நிலையில் இப்படம் 14ஆம் நூற்றாண்டில் நடக்கக்கூடிய கதை என்பதால், அதற்கு ஏற்றவாறு தன்னை நிரூபித்து வருகிறார்.

அவ்வாறு ஒட்டுமொத்த வெறியையும் வெளிப்படுத்தும் தோற்றத்தில் சூர்யா இடம்பெறும் காட்சி மக்களிடையே பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த நூற்றாண்டுக்கு ஏற்ப கற்களை பயன்படுத்தியும், மிருகங்களின் தோள்களை பயன்படுத்தியும் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read: ஒரே ஒரு டெக்னாலஜிக்காக பல கோடியை வாரி இறைக்கும் சங்கர்.. அமெரிக்காவில் நடைபெறும் தரமான சம்பவம்

மேலும் புலி நகம், யானை தந்தங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அணிகலன்களை அணிந்தவாறு சூர்யா இடம்பெற்ற காட்சி வேற லெவலில் பார்க்கப்பட்டது. அதிலும் கூடுதல் சிறப்பாக இப்படத்தில் இடம்பெறும் பேக் ரவுண்ட் மியூசிக் வேற லெவலில் பட்டையை கிளப்பி உள்ளது.

படத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு  கற்பனைக்கு உயிர் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஒர்க் செய்தவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், நுணுக்கங்களை அறிந்து பார்த்து செதுக்கி உள்ளனர். இது போன்ற முயற்சிகளால் இப்படம் அச்சு பிசறாமல் 14ம் நூற்றாண்டை நம் கண் முன் நிறுத்தி வருகிறது.

Also Read: 200 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்ட கணவன்.. நடிகையை போட்டு தள்ளிய தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News