தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

Vignesh Sivan: விக்னேஷ் சிவன் எப்போது நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தாரோ அந்த நேரத்தில் இருந்து அவர் முழு பாடிகார்டாக மாறிவிட்டார். அந்த அளவுக்கு நயன் பின்னாடியே அவர் சுற்றி வந்தது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்போது அட்லியால் அவருக்கு ஒரு புது சந்தேகம் முளைத்திருக்கிறதாம்.

இவரின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயின் ஆக அறிமுகமாகிறார். அதனாலேயே இப்போது தமிழில் கூட அவ்வளவாக படங்களை ஏற்காமல் ஹிந்தியில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளாராம்.

அதிலும் முதல் படமே பாலிவுட் சூப்பர் ஸ்டாரோடு இவருக்கு அமைந்திருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மூன்று கான் நடிகர்களும் அடுத்தடுத்து இவருக்கு வலை வீசி வருவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

அந்த வகையில் ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கான், அமீர்கான் ஆகியோரும் நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் தற்போது விக்னேஷ் சிவனை கதி கலங்க வைத்துள்ளது. ஏனென்றால் நயன்தாரா ஒரு தங்க முட்டை இடும் வாத்து.

அதனாலேயே விக்னேஷ் சிவன் தனக்கு பட வாய்ப்பு இல்லை என்றாலும் கவலைப்படாமல் மனைவியை பாதுகாத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா பாலிவுட் பக்கம் போய் எங்கு மாறி விடுவாரோ என்ற பயத்தில் தான் இவர் இப்போது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்.

அதன் காரணமாகவே இப்போது படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை கூட ஓரம் கட்டி விட்டு அவர் கண் கொத்தி பாம்பாக மனைவியை கண்காணித்து வருகிறாராம். அந்த வகையில் அட்லி ஆரம்பித்த இந்த புது பஞ்சாயத்து எங்கு போய் முடிய போகிறதோ என கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.