Actress Nayanthara: மலையாள மொழி படங்களில் அறிமுகமாகி, அதன் பின் தமிழ் சினிமாவில் பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இந்நிலையில் 90 காலகட்டத்திலேயே இவரைப் போல் நடித்து வந்த நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.
தன் தனித்துவமான நடிப்பால் அடுத்தடுத்த வாய்ப்பு பெற்று டாப் ஹீரோயின்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வருகிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்டார். மேலும் தற்போது தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்வாறு தன் திறமையால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நயன்தாரா. இவரின் சாதனை எல்லாம் இவர் முன் ஒன்றும் இல்லை எனக் கூறும் அளவிற்கு 90 காலகட்டத்திலேயே கொடி கட்டி பறந்தவர் ரேவதி. தன் எளிமையான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர். இவரின் நடனத்தால் வெற்றி கண்ட படங்களும் உண்டு. கற்பனையை கண் முன் கொண்டுவரும் சாதனை நாயகியாய் வலம் வந்தவர் ரேவதி. இவரின் எண்ணற்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.
அதுவும் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகமாய் நடித்த ஹீரோயினும் இவர்தான். அவ்வாறு மறுபடியும், மௌன ராகம், மருமகள், புதுமைப்பெண், அரங்கேற்ற வேளை, தெய்வ வாக்கு போன்ற படங்கள் எல்லாமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் ஆகும்.
இது போன்ற படங்களில் தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். அதிலும் குறிப்பாக நீ என் நெனப்போட விளையாடுவ நான் நெருப்போட விளையாடனுமா போன்ற வசனம் இவரின் நடிப்பில் புதுமை கண்டது. இத்தகைய நடிப்பு தற்போது உள்ள ஹீரோயின்களில் காண முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.