1. Home
  2. சினிமா Buzz

பப்பி ஷேமாக நடித்த நடிகைக்கு தூண்டில் போட்ட இயக்குனர்.. சிக்காமல் எஸ்கேப்பாக நடக்கும் போராட்டம்

பப்பி ஷேமாக நடித்த நடிகைக்கு தூண்டில் போட்ட இயக்குனர்.. சிக்காமல் எஸ்கேப்பாக நடக்கும் போராட்டம்

பிரபல நடிகை ஒருவர் எந்த கேரக்டராக இருந்தாலும் துணிந்து நடித்து விடுவார். கெட்ட வார்த்தை பேசுவதில் இருந்து ஓவர் கிளாமர் என அவர் நடித்த பல படங்கள் அவரை வேறொரு கோணத்தில் காண்பித்தது. அப்படி தான் தற்போது ஒரு படத்திலும் அவர் பப்பி ஷேமாக நடித்திருக்கிறார். இது குறித்து செய்திகள் வெளிவந்த போதே பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் நடிகையின் தைரியத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என படக்குழுவும் இயக்குனரும் அலப்பறை கொடுத்து வந்தனர். அதிலும் அந்த இயக்குனர் போகும் இடமெல்லாம் நடிகையை பற்றி ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளினார். ஆரம்பத்தில் இப்படி ஒரு காட்சியில் நடிக்கும் போது பெரிய அளவில் பயப்படாத நடிகைக்கு இப்போது உள்ளூர சிறு நடுக்கம் வந்து விட்டதாம். ஏனென்றால் இயக்குனர் அடுத்ததாக பெரிய ஹீரோவை வைத்து இயக்கும் படத்திலும் நடிகை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். அது மட்டுமல்லாமல் எக்குத்தப்பான சில காட்சிகளும் அதில் இருக்கிறதாம். இதனால் பயந்து போன நடிகை ஆள விடு சாமி என்று மறுத்திருக்கிறார். ஆனாலும் இயக்குனர் நடிகைக்கு தொடர்ந்து தூண்டில் போட்டு வருகிறாராம். இந்த முரட்டு இயக்குனரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்ற வழி தெரியாமல் நடிகை இப்போது தனி குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். அந்த அளவுக்கு பெரும் அக்கப்போராக ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.