Actor Vijay: தளபதி விஜய் நேற்றைய தினம் வெளிநாடு புறப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலானது. திடீரென விஜய் இவ்வாறு வெளிநாடு புறப்பட காரணம் என்ன என்று பலரும் விவாதிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் மூன்று காரணங்களை கூறியிருக்கிறார்.
அதாவது தனது மனைவி, மகன், மகள் மூவரும் வெளிநாட்டில் இருப்பதாக அவர்களைப் பார்ப்பதற்காக விஜய் சென்று இருக்கிறார் என்று கூறியுள்ளார். அடுத்ததாக அரசியலில் விஜய் சமீப காலமாக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அவர் செய்யும் அனைத்து காரியங்களும் நன்றாக இருந்தாலும் இன்னும் விஜய் இடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுக் குறைக்க விஜய்யின் வலது கையாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சினிமாவை கைவிட்டு விட்டு முழு நேரம் அரசியலில் இறங்குமாறு நச்சரித்துக் கொண்டிருக்கிறார். இவர்களிடமிருந்து கொஞ்சம் விலகி ஓய்வெடுத்துவிட்ட வரலாம் என்ற முடிவிலும் தளபதி வெளிநாடு சென்று இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார்.
இதில் முக்கிய காரணம் ஜெயிலரின் ஆடியோ லாஞ்ச் தான் என்று அடித்து சொல்கிறார் பயில்வான். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் பாடலில் விஜய்யை வச்சு செய்யும் படியான பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தது. இந்த சூழலில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
இதில் தமிழ் சினிமாவில் கமல் போன்ற முக்கிய நடிகர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். இதில் தளபதி விஜய்க்கும் அழைப்பு வந்திருக்கிறதாம். அதோடு மட்டுமல்லாமல் நெல்சன் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படத்தை எடுத்துள்ளதால் தளபதி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஹுக்கும் பாடலால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய் சோத்துலையும் அடிபட்டாச்சு, இனி சேத்துலையும் அடிப்படக் கூடாது என ஜெயிலர் விழாவில் இருந்து தப்பிக்க வெளிநாடு புறப்பட்டு இருக்கிறாராம். இந்த விஷயம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.