என் பொண்ணு அந்த மாதிரி காட்சிகளை நடிக்க மாட்டா.. அப்பா பேச்சை கேட்காமல் அதிதி கமிட்டான படம்

Director Shankar and Adhiti: இயக்குனர் சங்கர் எடுக்கும் படங்கள் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இவர் என்ன சொன்னாலும் அதை சரிவர கேட்டு அனைத்து முன்னணி நடிகர்களும் நடித்து வருவார்கள். அப்படிப்பட்ட இவருடைய நிஜ வாழ்க்கையில் இவரின் மகள் அதிதி இவர் பேச்சை கேட்காமல் பல விஷயங்களை செய்து வருகிறார்.

அதாவது அதிதி நடித்த விருமன் மற்றும் மாவீரன் இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். அதே மாதிரி ஹீரோயினாக ஒரு ரவுண்டு வருவார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக உறுதியாகி உள்ளது.

இப்படத்தின் ஹீரோ முதல் படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா தான். ஆனால் ஹீரோயின் சோனியா அகர்வால் இல்லை. இவருக்கு பதிலாக அதிதியிடம் பேசப்பட்டுள்ளது. அவரும் இந்த படத்தில் நடித்தால் கண்டிப்பாக பெயர் கிடைக்கும் என்ற ஆசையுடன் சம்மதத்தை தெரிவித்து விட்டார். ஆனால் 7ஜி ரெயின்போ காலனி முதல் பாகத்தில் படுக்கை அறை காட்சிகள் மற்றும் இரட்டை வசனங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் இருக்கும்.

அத்துடன் செல்வராகவன் எடுக்கக்கூடிய படம் என்றாலே இந்த மாதிரியான காட்சிகள் அதிகமாகவே இருக்கும். இதெல்லாம் தெரிந்தும் அதிதி எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் இந்தப் படத்தில் நடிப்பதற்கு இதுவரை ஷங்கர் அனுமதி கொடுக்கவே இல்லை.

எப்படியாவது அப்பா ஓகே சொல்லி விடுவார் என்ற தைரியத்தில் அதிதி இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் இப்பொழுது வரை சங்கர் மறுப்பு மட்டுமே தெரிவித்துக் கொண்டு வருகிறார். இதனால் பயத்தில் அதிதி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார். ஒருவேளை அதிதி இப்படத்தில் நடிக்கவில்லை என்றால் இவருக்கு பதிலாக இவானா நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் அதிதி நடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக இவனாவை நடிக்க வையுங்கள். காரணம் ரவி கிருஷ்ணா நடிப்பும் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். அதே மாதிரி அதிதியோட நடிப்பும் ஒன்னு போல தான் இருக்கும். இந்த மாதிரி இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து நடித்தால் படத்தை பார்க்க முடியாது. இதற்கு பெஸ்ட் இவனாவே ஹீரோயினாக போடுங்கள் என ரசிகர்கள் அவர்களுடைய கருத்துக்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.