செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

டீச்சர் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 பிரபலங்கள்.. ஒரு படி மேலே சென்ற ராட்சசி ஜோ

6 Celebrites: நிஜ வாழ்க்கை போலவே, படத்தில் டீச்சர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் பிரபலங்கள் மாணவர்களின் நலன் கருதி மேற்கொள்ளும் செயல்கள் பெரிதாக பார்க்கப்படும். அவ்வாறு படத்தில் டீச்சர் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 பிரபலங்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சமுத்திரக்கனி: 2012ல் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார்கள். துணை தலைமை ஆசிரியராய் மாணவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் தம்பி ராமையாவை தன் போக்கில் மாற்ற முயலும் கதாபாத்திரத்தில் மாணவர்களின் நண்பனாய் சமுத்திரக்கனி நடித்திருப்பார்.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி.. நண்பனுக்காக அரங்கேறிய சம்பவம்

ஜோதிகா: 2019ல் உமன் சென்ட்ரிக் படமாய் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி, மக்களிடையே நேர்மறை விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி கண்டது. அரசு பள்ளியை மேம்படுத்த தலைமை ஆசிரியராய் போராடும் ஜோதிகாவின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிதாக பேசப்பட்டது. மேலும் இப்படத்திற்காகவே ஜோதிகா டீச்சர் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் எனவும் கூறலாம்.

அமலா பால்: 2015ல் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். பெற்றோர்களால் கவனித்துக் கொள்ள முடியாத குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றும் சிறந்த ஆசிரியராய் அமலாபால் இப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: தேசிய விருது வாங்கி கொடுத்த தயாரிப்பாளரை அலையவிடும் தனுஷ்.. பேரும் புகழும் வந்ததும் பழசை மறந்து விட்டாரா?

நதியா: 2009ல் வெளிவந்த பட்டாளம் படத்தில் பள்ளி நிர்வாகி கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் நதியா. இப்படத்தில் ஒன்பது மாணவ, மாணவர்கள் இடையே இருக்கும் நட்பை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். மேலும் இப்படத்தில் மாணவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த டீச்சராய் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

சினேகா: 2019 ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஹரிதாஸ். இப்படத்தில் கிஷோர், சினேகா, பிரித்விராஜ் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதையை விரும்பி டீச்சர் கதாபாத்திரம் ஏற்று சினேகா தன் தத்துரூபமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: காமெடியில் அசத்திய கமலின் 5 படங்கள்.. பட்டித் தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய சண்முகி

விமல்: 2011ல் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வாகை சூடவா. இப்படத்தில் விமல், இனியா, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் விமல் கிராமத்து மக்களின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர முயலும் காட்சிகள் நகைச்சுவையாய் அமைந்து, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Trending News