அஜித், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து துணிக்கடையை நடத்தி வரும் நடிகை.. மொத்தமாக கைநழுவி போன வாய்ப்புகள்

Ajith Vikram Movie Actress: சினிமாவைப் பொறுத்தவரை யாராவது பிரபலமாக வேண்டும் என்றால் நல்ல வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுடன் ஏதாவது படங்களில் நடித்தால் போதும். அவர்கள் மக்களிடத்தில் பரிச்சயம் ஆகி விடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பிடித்துக் கொண்டு முன்னேறி வருவார்கள். இது எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கேட்டால் கண்டிப்பாக இருக்காது.

ஏனென்றால் எந்த அளவிற்கு திறமையும், வாய்ப்புகளும் இருக்கிறதோ, அதில் கொஞ்சமாவது அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது இந்த நடிகை விஷயத்தில் சரியாக இருக்கிறது. அதாவது அஜித் மற்றும் விக்ரம் வளர்ந்து வந்த காலங்களில் இவருக்கு ஜோடியாக ஒரு நடிகை நடித்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

அதன் மூலம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரைப் பார்ப்பதற்கு ரொம்ப அழகு என்று சொல்லிக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் நடிப்பின் திறமை இவரிடம் கொட்டி கிடந்தது. ஆனாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

இவர் பெயர் சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடிய அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் இல்லாமல் இவரை விட்டு மொத்தமாக சினிமா கைநழுவி போய்விட்டது. இதனால் ஒரு சிலர் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். அங்கேயும் இவருக்கு பெருசாக சொல்லும் படியான கதாபாத்திரம் அமையாததால் அப்படியே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

அந்த நடிகை வேறு யாருமில்லை பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்தம்மா படத்தில் நடித்த மகேஸ்வரி தான். இவர் அஜித் மற்றும் விக்ரமுக்கு ஜோடியாக உல்லாசம், நேசம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபுதேவாவுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் பிசினஸில் இறங்கிவிட்டார்.

இவர் ஃபேஷன் டிசைனிங் சம்பந்தமாகவே இவருடைய கவனத்தை திருப்பி விட்டார். ஹைதராபாத்தில் மகி ஐயப்பனின் என்ற பேஷன் ஸ்டோர் வைத்துள்ளார். இந்த கடையை திறந்து வைத்தது நடிகை ஸ்ரீதேவி தான். தற்போது துணிக்கடையை நடத்தி வரும் நடிகை மகேஸ்வரி எவ்வளவு படங்கள் நடித்து இருந்தாலும், தற்போது ரொம்பவே சாதாரணமான நிலைமைக்கு ஆகிவிட்டார்.