ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் குட்டி ஸ்டோரியை வைத்து பதிலடி கொடுப்பதற்கு நாள் குறிச்சாச்சு.. பிரம்மாண்டமாக வரவுள்ள லியோ ஆடியோ லான்ச்

Leo Audio Launch: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சின் போது ரஜினி விஜய்யை தான் தாக்கிப் பேசியதாக சொல்லப்பட்டது.

Also Read: ஏற்கனவே தளபதியுடன் நடித்துள்ள மாமன்னன் ரத்தினவேல்.. 2ம் முறையாக லோகேஷ் வைத்துள்ள டிவிஸ்ட்

இது விஜய்க்கும் தோன்றியிருந்தால், நிச்சயம் லியோ ஆடியோ லான்ச்சில் அதற்கு பதில் கொடுத்து விடுவார். அதன்படி வரும் செப்டம்பர் மாத இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவெடுத்துள்ளனர். இதற்காக குட்டி ஸ்டோரியுடன் விஜய்யும் தயாராகிவிட்டார்.

வரும் செப்டம்பர் 24ஆம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் விஜய் தனது படத்தின் ஆடியோ லான்ச்சின் போது ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரியை சொல்லி அசத்துவார். அந்த வகையில் இந்த முறை ரஜினி சொன்ன காக்கா, பருந்து ஸ்டோரிக்கு பதில் கொடுக்கும் அளவுக்கு விஜய்யின் குட்டி ஸ்டோரி இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒத்த வார்த்தை.. லியோ ஆடியோ லான்ச்காக காத்திருக்கும் விஜய்

மேலும் தற்போது ரஜினியின் அரசியல் பயணம் வேகம் எடுத்து இருப்பதால் இந்த முறை லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை மதுரை, கோவை, திருச்சி போன்ற தென் மாவட்டங்களில் நடத்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் லியோ ஆடியோ லான்சை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் 24ஆம் தேதி எங்கு நடக்கப்போகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் ஹிந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி பிரபலங்களும் இணைந்து நடிப்பதால் இந்த படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: சஞ்சய் தத்துக்கு மகன் விஜய் இல்லையாம்.. லோகேஷ் சொன்ன சுவாரஸ்யம்

Trending News