1. Home
  2. எவர்கிரீன்

செல்வராகவனை காலி பண்ணிய 5 படங்கள்..

செல்வராகவனை காலி பண்ணிய 5 படங்கள்..
செல்வராகவன் இயக்கிய ஒவ்வொரு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை பெற்றிருக்கின்றன.

Selvaraghavan flop movies: இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர். ஆனால் இவரை கொண்டாடும் அளவிற்கு, இவருடைய படங்களை ரசிகர்கள் வெற்றி பெற வைப்பதில் தவறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். செல்வராகவன் இயக்கிய ஒவ்வொரு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை பெற்றிருக்கின்றன. அதிலும் இந்த ஐந்து படங்களால் அவர் தோல்வி பட இயக்குனராகவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டார்.

ஆயிரத்தில் ஒருவன் : ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தற்போது கேஜிஎப், பாகுபலியை விட சிறந்த படம் என்று சொல்லி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் மூலம் செல்வராகவனுக்கு ரசிகர்களும் அதிகமாக ஆகினார்கள். ஆனால் இது எல்லாம் படம் ரிலீஸ் ஆகி ஒரு சில வருடங்கள் கழித்து தான் நடந்தது. ஆயிரத்தில் ஒருவன் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு வணிகரீதியாக மிகப்பெரிய அடி வாங்கிய திரைப்படம்.

இரண்டாம் உலகம் : ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வித்தியாசமான கதை களத்தில் உருவான திரைப்படம் தான் இரண்டாம் உலகம். இன்று வரை இந்த படத்தை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பவர்கள் அதிகம். படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தன. ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போது பொருளாதார ரீதியாக தோல்வியைத் தான் சந்தித்தது.

என் ஜி கே: இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து சற்று விலகி வித்தியாசமான கதையை முயற்சி செய்த படம் தான் சூர்யா நடித்த என் ஜி கே. செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

நெஞ்சம் மறப்பதில்லை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து பணியாற்றிய படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார். நடிப்பை மட்டுமே பாராட்டிய ரசிகர்கள் இந்த படத்தை வெற்றி பெறச் செய்யவில்லை.

நானே வருவேன்: செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடிக்கும் படங்களுக்கே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். இந்த நானே வருவேன் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது படம் ரிலீசுக்கு முன்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரிலீசாக ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.