சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டி ராஜேந்தர் பட நடிகருக்கு நிகழ்ந்த மரணம்.. சினிமா கலைஞர்களை துரத்தும் அந்த நோய், இப்படிதான் இறப்பு வருமா.!

T.Rajendar Movie Actor Passed Away: இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் படங்களின் நடித்து ஒருவர் திடீரென மரணம் அடைந்து இருக்கிறார். இவருடைய மரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்ததோடு மரணத்திற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நிறைய சினிமா கலைஞர்கள் இந்த காரணத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள்.

டி.ராஜேந்தருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்த படம் ஒரு தலை ராகம். இந்த படத்தில் நடித்தவர் தான் கைலாஷ் நாத். இவர் நடிகர் மட்டுமல்லாமல், மிமிக்ரி கலைஞரும் ஆவார். இவர் 163 படங்களில் நடித்திருக்கிறார். அதில் 90 படங்கள் தமிழில் மட்டுமே. கைலாஷ்நாத் மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் இவருக்கு தமிழில் டப்பிங் தான் கொடுக்கப்பட்டது.

Also Read:பாசத்தால் உருக வைத்த டி ராஜேந்தர் 5 படங்கள்.. அண்ணன் தங்கை பாசத்தை காட்டிய ‘என் தங்கை கல்யாணி’

கைலாஷ்நாத் தமிழில் நடித்த பாலைவனச்சோலை என்னும் படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் அவர் தம்பு என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். மலையாளம் மற்றும் கன்னட சினிமாக்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் இவர். சினிமா கல்லூரியில் இவருடன் படித்தவர்கள் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும், பன்முகத் திறமை கொண்ட நடிகர் நாசரும்.

                                                                       நடிகர் தியாகு உடன் கைலாஷ்நாத்

Kailashnath
Kailashnath

நல்ல திறமையான நடிகராக பெயர் பெற்ற இவர், தன்னுடைய 65 ஆவது வயதில் மரணம் அடைந்து இருக்கிறார். இவருக்கு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு பல நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read:கொள்கையோடு சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்கள்.. நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடித்த டி ஆர்

இவருடைய இந்த திடீரிழப்பு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிற்கும் மிகப்பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அதிலும் இவர் கல்லீரல் பாதிப்படைந்து இறந்திருக்கிறார். சமீப காலமாக நிறைய சினிமா கலைஞர்கள் இந்த நோய் பாதிப்பினால் தான் இறக்கிறார்கள். இந்த நோய் தொடர்ந்து சினிமா நடிகர்களை பாதித்து வருகிறது.

இவர்களுடைய உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறைதான் இந்த நோய் பாதிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்கள் பலர் தொடர்ந்து மாரடைப்பினாலும் இறந்து இருக்கிறார்கள்.

Also Read:எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

Trending News