வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோவிலில் சகல மரியாதை கொடுத்து அசிங்கப்பட்ட யோகி பாபு.. தீண்டாமை ஒரு பாவச் செயல்

Actor Yogi Babu: யோகி பாபு தற்போது முன்னணியில் இருக்கும் காமெடியனாகவும், கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய பேச்சுக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இவரை தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இவரிடம் கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருக்கிறார். மேலும் இவரை பற்றி ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக பிரபலங்கள் என்னதான் திறமைகளை வைத்து முன்னுக்கு வந்திருந்தாலும், அவர்களுடைய முக்கால்வாசி அர்ப்பணிப்பு இறைவனை தேடி இருக்கும்.

Also read: கொஞ்சம் மோசமான ரஃக்டு லுக்கை வைத்து ஜெயித்த 6 நடிகர்கள்.. யோகி பாபு போல புகழ் பெற்ற 4 ஆக்டர்ஸ்

அந்த வகையில் பல பிரபலங்களும் இறைவனை தரிசனம் செய்து வருகிறார்கள். அதே மாதிரி யோகி பாபுவும் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கே பல பூஜைகளை செய்து விட்டு கழுத்தில் நிறைய மாலைகளை அணிந்து கொண்டு கோவிலில் வலம் வந்திருக்கிறார்.

அப்பொழுது இவரை சுற்றி நிறைய ரசிகர்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு வரிசையாக காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரது பக்கத்திலும் நின்று போட்டோக்களை எடுக்க அனுமதி கொடுத்திருந்தார். அத்துடன் இவரை பார்ப்பதற்கு ஏதோ வேண்டுதலை நிறைவேற்றி வந்த மாதிரி தெரிந்தது.

Also read: வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

மேலும் எல்லா பூஜையும் முடிந்த பிறகு அங்கு நின்று கொண்டிருந்த பூசாரிக்கு யோகி பாபு அருகில் சென்று கை கொடுத்தார். ஆனால் அவர் கை கொடுப்பதற்கு மறுத்துவிட்டு பேச ஆரம்பித்து விட்டார். அந்த நிமிடத்தில் யோகி பாபு பெரிய அவமானங்களை சந்தித்து அசிங்கப்பட்டதை வீடியோ ஒன்று மூலம் அப்பட்டமாக வெளியாகி வருகிறது.

எத்தனை வருடங்கள் ஆனாலும் சிலரை மாற்றவே முடியாது. தீண்டாமை என்னும் பெரிய பாவச் செயல் இன்னும் தலைவிரித்து கொண்டு தான் வருகிறது. யோகி பாபுவை தொட்டுவிட்டால் தீண்டாமை ஆகிவிடும் என்று அவரை அசிங்கப்படுத்தி விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

yogibabu-temple
yogibabu-temple

Also read: மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி போட ஆசைப்படும் யோகி பாபு.. வெளியான சூப்பர் அப்டேட்

Trending News