வயித்தெரிச்சலில் கரையும் காக்கா, ஜெயிலருக்கு எதிராக நடக்கும் சதி.. கொடுத்த காசுக்கு மேல கூவும் ப்ளூ சட்டை

Jailer-Blue Sattai Maaran: டாப் ஹீரோக்கள் அனைவரையும் தொடர்ந்து வம்புக்கு இழுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக டார்கெட் செய்திருப்பது சூப்பர் ஸ்டாரை தான். அவர் மீது இவருக்கு அப்படி என்ன வன்மமோ தெரியவில்லை தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு எதிரான பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதன் மூலம் அப்படத்தை அவர் தோல்வி படமாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் ரஜினி ரசிகர்கள் தற்போது இவர் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டால் கொலை காண்டில் இருக்கின்றனர். ஏற்கனவே ரஜினி காகம், பருந்து கதை சொன்னபோது தன்னைத்தான் அவர் காக்கா என்று சொல்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார்.

Also read: ரிலீஸ்-க்கு முன்பே வசூல் வேட்டையில் சொல்லி அடிக்கும் ஜெயிலர்.. வாய் கிழிய பேசினவங்களுக்கு விழும் அடி

அந்த வகையில் தற்போது அவர் ஜெயிலர் வெளியீட்டிற்கு சில தினங்கள் மட்டுமே இருப்பதால் ரஜினி ரசிகர்கள் படத்தை வெற்றியடைய வைக்க தீயாக உழைக்கின்றனர் என தெரிவித்துள்ளார். அதிலும் டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனை படைத்துள்ளது என நேற்றிலிருந்து அலப்பறை கொடுத்து வரும் ரசிகர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி வரை அதை தொடர்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல் நாளே 100 கோடி கலெக்ஷன், ஒரு வாரத்தில் 500 கோடி, மொத்த கலெக்ஷன் 2000 கோடி என அவர்கள் பொய்யான தகவலை பரப்ப போகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அவதார் பட இயக்குனரே தலைவரின் கால்சீட்டை கேட்கிறார் என்ற அலப்பறையும் கிளம்பும் என ரஜினி குறித்து தாறுமாறாக இவர் விமர்சித்துள்ளார்.

Also read: ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அவருக்கு நெத்தியடி பதிலை கொடுத்து வருகின்றனர். மேலும் ஜெயிலர் படம் எங்கே வெற்றி பெற்று விடுமோ என்ற வயிற்றெரிச்சலில் தான் ப்ளூ சட்டை காக்கா போல் கரைகிறார் எனவும் அவர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் ஜெயிலர் படத்தை தோல்வி அடைய வைக்க பல சதி வேலைகளை செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் காசு வாங்கிக் கொண்டு ட்வீட் போடுவதாக கூட ஒரு கருத்து எழுந்துள்ளது. அந்த வகையில் கொடுத்த காசுக்கு மேல் கூவும் இந்த ப்ளூ சட்டை ஜெயிலர் படத்தையும் கண்டபடி விமர்சித்து தன்னுடைய சேனலில் வீடியோ போட்டு காசு பார்க்க தான் போகிறார். அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பந்தா என ரசிகர்கள் இவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Also read: துப்பாக்கியை எடுத்து சுட்டுடுவேன்.. பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார், காரணம் இதுதான்