சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

திருட்டை மையமாக வைத்து வெற்றி கண்ட 6 படங்கள்.. சதுரங்க வேட்டையில் நவீன திருட்டை கற்றுக் கொடுத்த நட்டி

6 Successful Films Based On Robbery: பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரையில் கதாநாயகர்கள் என்பவர்கள் மிகவும் நேர்மையான கேரக்டராக இருப்பவர்களாக தான் காட்டப்படுவார்கள். ஆனால் சில படங்களில் கதாநாயகர்களே ஏதோ ஒரு காரணத்திற்காக பணத்தை திருடுவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருட்டை மையமாக வைத்து வெளியான 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

ஜென்டில்மேன் : ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் சிறுவயதில் ஏற்பட்ட அவமானம் காரணமாக அர்ஜுன் திருட்டில் ஈடுபடுகிறார். ஆனால் அதற்கும் ஒரு நியாயமான காரணம் வைத்துள்ள நிலையில் அந்தப் பணத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவார்.

Also Read : இந்தியன் 2 படத்தில் சூதனமான உதயநிதி.. மொத்தமாக இடி விழுந்தது போல் நொறுங்கிய ஷங்கர்

திருடா திருடா : மணிரத்னம் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு பிரசாந்த், ஆனந்த், அனு அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திருடா திருடா. இந்த படத்தில் வங்கி ஒன்றில் வேறு ஒரு கும்பல் ஆயிரம் கோடியை திருடி வந்த நிலையில் அதை பிரசாந்த் மற்றும் ஆனந்த் எப்படி திருடுகிறார்கள் என்பதை வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

சதுரங்க வேட்டை : வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு நட்டி நடராஜ், இஷாரா நாயர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த படம் நவீன திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. வினோத்தின் அறிமுக படமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை சதுரங்க வேட்டை படத்திற்கு கொடுத்திருந்தனர்.

Also Read : லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

மங்காத்தா : அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் உருவான படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் கிரிக்கெட் பந்தயத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் எப்படி திருடுகிறார்கள் என்பதுதான் மையக்கதை.

சூது கவ்வும் : நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமான லுக்கில் காணப்பட்டார். இப்படமும் திருட்டை மையமாக வைத்து வெற்றி கண்ட படம்.

நாணயம் : சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் பிரசன்னா, ரம்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாணயம். இந்த படத்தில் கேங்ஸ்டர் கும்பல் வங்கியில் உள்ள பணம் மற்றும் பொருட்களை எவ்வாறு சாமர்த்தியமாக திருடுகிறார்கள் என்பதுதான் நாணயம். இப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

Also Read : அஜித் எடுக்கும் புதிய முடிவு.. நடப்பதை பார்த்து அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன!

- Advertisement -spot_img

Trending News