Super Star Rajini: தன்னுடைய 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராகவே இருக்கிறார். இவரை பொதுவெளியில் அசிங்கமாக பேசிய 5 பிரபலங்களை பற்றி பார்ப்போம்,
பாரதிராஜா: எண்பதுகளில் கிராமத்துப் பின்னணியில் அமைந்த தரமான படங்களை கொடுத்த இயக்குனரிமே பாரதிராஜா இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் பொதுவெளியில் மோசமாக ரஜினியை விமர்சித்து பேசியவர். அதற்கு ரஜினி, ‘பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி’ என்று சொல்லி அவருடைய படங்களை தட்டிக் கழிக்காமல் நடித்து வந்தார். காரணம் பாரதிராஜா ரஜினியை வளர்த்தவர்களில் ஒருவர்.
Also Read: ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்
மனோரமா: 80களில் காமெடி கதாபாத்திரங்களிலும் குணசத்திர கேரக்டர்களிலும் நடித்து கலக்கிக் கொண்டிருந்த நடிகை தான் மனோரமா. இவர் பின்னாளில் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். இவரும் பொதுவெளியில் அரசியல் சம்பந்தமாக மோசமாக ரஜினியை விமர்சித்தார் இதற்கு பில்லா படத்தில் ரஜினிக்கு மனோரமா துணையாக நின்றதை மறக்காமல் மீண்டும் மனோரமாவை அண்ணாமலை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
வடிவேலு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நிறைய படங்களில் காமெடி நடிகராக நடித்த வடிவேலு கருத்து வேறுபாடு காரணமாக இவரும் பொதுவெளியில் ரஜினியை மோசமாக விமர்சித்தார். ஆனால் அதைப்பற்றி யோசிக்காமல் சந்திரமுகி படத்தில் வாய்ப்பு கொடுத்து சந்தோசப்படுத்தி கொண்டார் ரஜினி.
Also Read: கடைசி மூச்சு இருக்க வர நடிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்
சத்யராஜ்: ஆரம்பகாலத்தில் இருந்து சத்யராஜிற்கு ரஜினியை பிடிக்காது. தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை தலை தூக்கி
நின்ற போது பல நடிகர் போராட்டத்தில் பங்கு கொண்டனர். ஆனால் ரஜினி மட்டும் எந்த கருத்தும் தெரிவிக்காததால் வேற்று மாநில நடிகருக்கு தமிழக மக்களின் கஷ்டம் புரியாது என கடுமையாக ரஜினியை தாக்கி பேசினார். ஆனால் அதையும் மறந்து சிவாஜி படத்தில் ஷங்கர், சத்யராஜை நடிக்க வைக்க கேட்டார் ரஜினி ஒப்புக்கொண்டார். ஆனால் சத்யராஜ் ரஜினியுடன் நடிக்க மறுத்துவிட்டார்.
பாலச்சந்தர்: சாதாரண பஸ் கண்டக்டர் ஆக இருந்த ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாலச்சந்தர் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். பலமுறை பாலச்சந்தருக்கு இவருக்கும் பிரச்சனை வந்துள்ளது, அதை வெளியில் சொன்னதே இல்லை ரஜினி. தொடர்ந்து படங்கள் நடித்து கொடுத்தார், எவ்வளவுதான் குரு அசிங்கப்படுத்தினாலும் அதை தாங்கிக் கொண்டவர் தான் ரஜினி.
Also Read: ரிலீஸ்-க்கு முன்பே வசூல் வேட்டையில் சொல்லி அடிக்கும் ஜெயிலர்.. வாய் கிழிய பேசினவங்களுக்கு விழும் அடி