திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அஜித்தின் வேதாளத்தை ரீமேக் செய்ய இதுதான் முக்கிய காரணம்.. அடேங்கப்பா! என்ன ஒரு புத்திசாலித்தனம்

Vedhaalam Remake: இந்திய சினிமாவில் தற்போது ரீமேக் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக பாலிவுட் சினிமாவில் இருப்பவர்கள், தென்னிந்திய சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், படங்கள், இயக்குனர்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு ஹிந்தியில் ரீமேக் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது, மாஸ் நடிகர் ஒருவர் தமிழ் படம் ஒன்றே ரீமேக் செய்திருக்கிறார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வேதாளம் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் அஜித்துக்கு ஜோடியாகவும், லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். அண்ணன்- தங்கை சென்டிமென்ட் அதிகம் காட்டப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Also Read:லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

இந்த படத்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது போலோ சங்கர் என்னும் பெயரில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை தமன்னா அவருக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவருக்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார்கள். போலோ சங்கர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும் ஆந்திராவில் வசூலில் போட்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலோ சங்கர் பட விழா இன்று நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசிய விஷயங்கள் அந்த இடத்தில் சலசலப்பை உண்டாக்கியதோடு, மீடியாவிலும் பேசு பொருளாகி இருக்கிறது. அதே நேரத்தில் எதற்காக அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்ய செலக்ட் செய்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு சிரஞ்சீவி சொன்ன பதில் அத்தனை பேரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Also Read:அஜித் எடுக்கும் புதிய முடிவு.. நடப்பதை பார்த்து அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன!

மீடியாவின் கேள்விக்கு பதில் அளித்த சிரஞ்சீவி, நடிகர் அஜித்குமார் நடித்த வேதாளம் படம் எந்த ஓடிடியிலும் இல்லை அதனால் தான் இந்த படத்தை நான் தேர்வு செய்து நடித்திருக்கிறேன் என்று சொன்னார். ஒரு படத்தை ரீமேக் செய்வதற்கு இப்படி எல்லாம் காரணம் இருக்குமா என நெட்டிசன்கள் தற்போது சிரஞ்சீவியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சினிமாவில் புகழ் பெற்ற சிரஞ்சீவி, அரசியலிலும் களமிறங்கினார். ஆனால் ஆந்திர அரசியல் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் சினிமாவுக்கே திரும்பி வந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்த முயற்சியும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இதனால் வெற்றி படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

Also Read:மாமனார், மருமகனுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தலைவர் 170-ல் இணைந்த கேரளத்து பைங்கிளி

Trending News