சிவாஜியை அடுத்த தலைமுறை நடிகர்களை தூக்கி நிறுத்தி 5 படங்கள்..

Actor Sivaji Ganeshan: தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்  சிவாஜி கணேசன். இவருடைய தத்துரூபமான நடிப்பும், கம்பீரமான குரலும் ரசிகர்களை எப்பொழுதுமே பிரமிப்பில் ஆழ்த்தும். இவருடைய நடிப்பை பார்த்து தான் பல முன்னணி ஹீரோக்கள் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

விஜய்: 1997 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, விஜய், சிம்ரன், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து இவருடைய சொத்தை மீட்டுக் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு ஒரு வாலிப இளைஞர் எப்படி துறுதுறுப்பாக இருப்பாரோ அதைப்போல் ரசிக்கும் படியாக இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும்.

கமல்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர்மகன் திரைப்படம் வெளிவந்தது இதில் சிவாஜி, கமலஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமலுக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இதில் ஊர் தலைவராகவும், அந்த மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய கேரக்டரில் எதார்த்தமாக நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

பிரபு: பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு பசும்பொன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, பிரபு, ராதிகா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ராதிகாவுக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இதில் கல்யாணம் ஆன சில காலங்களில் கணவனை இழந்த தன் மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்கும் ஒரு பாசக்கார தந்தையாக இவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்திற்காக சிவாஜி சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு, சிவாஜி அப்பாவாக நடித்திருப்பார். இந்த படம் தான் சிவாஜி நடித்த கடைசி படம். இப்படத்தில் சிவாஜி ஊரைக் கட்டிக் காக்கும் தலைவராக இவருடைய எதார்த்தமான நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருப்பார். இப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்புக்காக வாங்கிய சம்பளம் ஒரு கோடி. இதுதான் அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம்.

சத்யராஜ்: இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, சத்யராஜ், ராதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி நீதிபதியாக நடித்திருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலையால் சத்யராஜ் தண்டனை அனுபவித்து வருவார். இவரை காப்பாற்றும் பொறுப்பில் சிவாஜி அவருடைய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →