சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

இளையராஜா, ஏஆர் ரகுமான் கிட்ட இல்லாதது ரெண்டுமே அனிருத் கிட்ட இருக்கு.. பெருமை பேசி உச்சிக் குளிர்ந்த ரஜினி

Actor Rajini: அனிருத் தற்போது அனைத்து நடிகர்களின் ஃபேவரிட் இசை நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர், விஜய்க்கு லியோ, ஷாருக்கானுக்கு ஜவான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவருடைய பாடல் அடி தூளாக இருக்கிறது.

மேலும் என்னதான் இவர் முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தாலும், ரஜினி பாடல்கள் என்றால் அதற்கு ஒரு தனித்துவம் இருக்கிற மாதிரி கூடுதல் ஸ்பெஷலாக இவருடைய கலை அத்தனையும் கொடுத்திருப்பார். அந்த வகையில் ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

Also read: விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

அதனால் தான் ரஜினி எப்பொழுதுமே இவரை தன்னுடைய படங்களில் கண்டிப்பாக அனிருத் வேண்டும் என்று கேட்டு விடுவார். மேலும் ரஜினி தற்போது அனிருத்தை பற்றி பெருமை பேசி அவரை உச்சி குளிர வைத்திருக்கிறார். அதாவது ஒவ்வொரு கலைஞரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். நான் பார்த்து வந்த இளையராஜாவிடம் படத்திற்கான கதையும், ஞானமும் வைத்து அதற்கேற்ற மாதிரி பாடல்களை கொடுப்பார்.

அதே போல் ஏஆர் ரகுமான் என்னென்ன நவீன இசை கருவிகள் இருக்குமோ அதை எல்லாம் பயன்படுத்தி ஜாம்பவான் என்று சொல்லும் அளவிற்கு பாடல்களை அமைத்துக் கொடுப்பார். ஆனால் இது இரண்டையுமே நான் ஒன்றாக பார்த்தவர் என்றால் அது அனிருத் தான். இளையராஜா ஏ ஆர் ரகுமான் இவர்கள் இரண்டு பேர் கிட்டயும் இல்லாதது அனிருத்திடம் இருக்கிறது.

Also read: மணிரத்தினம் பட கதையைக் கேட்டு அடம்பிடித்த ஏஆர் ரகுமான்.. புது மேஜிக் செய்ய காத்திருக்கும் மும்மூர்த்திகள்

அதுவும் 24 வயது உள்ள ஒரு பையனிடம் இவ்வளவு திறமைகள் இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தி பலமுறை யோசிக்க வைத்திருக்கிறது. முக்கியமாக அனிருத்தை பற்றி சொல்ல வேண்டியது எந்த நடிகர்களுக்கு எந்த மாதிரி பாடல்கள் அமைய வேண்டும், என்று கவனத்தை வைத்துக்கொண்டு கொடுத்து வருகிறார் என்று ரஜினி முழுக்க முழுக்க அனிருத்தை பெருமையாக பேசி உள்ளார்.

அந்த வகையில் இவர் சொன்னது உண்மையாகவே இருந்தாலும், இத்தனை வருட காலங்களாக இசை ஜாம்பவான்களாக இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமான் இருந்த நிலையில், திடீரென்று முளைத்த அனிருத்வை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதெல்லாம் இவருடைய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இவ்வளவு பெருமை பேசி இருக்கிறார் என்று பலரும் அவர்களுடைய ஆதங்கங்களை கொட்டி வருகிறார்கள்.

Also read: சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

- Advertisement -spot_img

Trending News