செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரத்தினவேலுக்கு முன்பே அவர் அப்பாவை கொண்டாடிய 6 படங்கள்.. விஜய் மார்க்கெட்டை தூக்கி விட்ட இயக்குனர்

Director Fazil Tamil Movies: தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்று வலம் வந்து கொண்டிருப்பவர் பகத் பாசில் . இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். மாமன்னன் படம் ரிலீஸ் ஆன பிறகு பகத்துக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஆனால் இவருக்கு முன்பே இவருடைய அப்பா பாசில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய இந்த ஆறு படங்களை இயக்கியவர்.

காதலுக்கு மரியாதை: தளபதி விஜய்க்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். இன்று வரை இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1997 ஆம் ஆண்டு ரிலீசான இந்த படத்தை இயக்கியது இயக்குனர் பாசில் தான். விஜய்யின் சினிமா கேரியரில் சிறந்த படங்கள் என்ற வரிசையில் கண்டிப்பாக காதலுக்கு மரியாதை படத்திற்கும் இடம் உண்டு.

Also Read:அக்கா தங்கை இணைந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. அம்பிகா ஸ்கோர் செய்தும் தட்டி தூக்கிய ராதா

அரங்கேற்ற வேளை: இயக்குனர் பாசில் இயக்கத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை கதை களத்தோடு வெளியான படம் அரங்கேற்ற வேளை. இந்த படத்தில் பிரபு, ரேவதி மற்றும் விகே ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்கள் மூன்று பேருக்குமே செண்டிமெண்டாக நிறைய காட்சிகள் இருந்தாலும் இவர்களுடைய காம்போவில் வந்த பல காட்சிகள் சிரிப்பு வரவழைப்பதாக இருந்தது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

வருஷம் பதினாறு: 1989 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான படம் வருஷம் 16. தமிழ் சினிமா ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டது. இன்று வரை இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக தான் இருக்கிறது. குஷ்பூ கதாநாயகியாக நடித்து முதன் முதலில் ரிலீஸ் ஆன படம் வருஷம் 16.

Also Read:41 வயதில் மாமன்னன் ரத்தினவேலின் சொத்து மதிப்பு.. மாமன்னால் எகிரிய பகத் பாசிலின் மார்க்கெட்

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு: சத்யராஜ், சுகாசினி, ரகுவரன், ரேகா நடிப்பில் வெளியான படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. ஒரு குழந்தையை மையமாகக் கொண்டு தாய் பாசம் மற்றும் வளர்த்த பாசம் என இரண்டையும் பற்றி அதிக சென்டிமென்ட் ஆக பேசி வெளியானது இந்த படம். நடிகர் சத்யராஜூக்கு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படம் சினிமாவில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

பூ விழி வாசலிலே: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யராஜ் மீண்டும் அதே குழந்தை கான்செப்டில் நடித்த படம் தான் பூவிழி வாசலிலே. ஒரு கொலையை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

பூவே பூச்சூடவா: நடிகைகள் பத்மினி மற்றும் நதியா இணைந்து நடித்த படம் பூவே பூச்சூடவா. இந்த படம் தான் நதியாவுக்கு தமிழில் முதல் படம். பாட்டி மற்றும் பேத்திக்கான உறவை ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக சொல்லிய இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகும்.

Also Read:தோல்வியை ஒத்துக்கொண்ட பகத் பாசில்.. சரியான நெத்தியடி கொடுத்து வெளியிட்ட புகைப்படம்

Trending News