திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டான்ஸ், நடிப்பு எதுவுமே தெரியாமல் சூர்யா தோற்ற 5 படங்கள்.. வெறுத்து போன ரஜினி, விஜயகாந்த் தூக்கி விட்ட படம்

Actor Suryaa: நடிகர் சூர்யாவின் சினிமா வளர்ச்சி என்பது ரொம்பவும் பிரமிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர் சினிமாவுக்கு வந்தது என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று. முதலில் டான்ஸ், நடிப்பு என்று எதுவுமே தெரியாமல் இருந்தார். இதனால் அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் ரொம்பவே அதிகம். அதன் பின்னர் சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என தன்னை தானே செதுக்கி கொண்டார்.

நேருக்கு நேர்: இயக்குனர் வசந்த் இயக்கத்தில், விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த படம் நேருக்கு நேர். இந்த படம் தான் அவர் அறிமுகமான படம் ஆகும். இந்த படத்தில் சூர்யாவுக்கு சுத்தமாக கேமராவை கூட பார்த்து நடிக்க தெரியாமல் இருந்தா. தளபதி விஜய், சிம்ரன் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இடையே சூர்யா கொஞ்சம் கூட எடுபடாமல் போய்விட்டார்.

Also Read:அட்டர் ஃப்ளாப்பால் மோசம் போன அக்கட தேசத்து நடிகர்.. அஜித், சூர்யா பட இயக்குனர் காட்டிய பந்தா!

சந்திப்போமா: 1998 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் சந்திப்போமா. இந்த படத்தில் அவருடன் ப்ரீத்தா விஜயகுமார், ராதிகா, பிரகாஷ் ராஜ், சரத்பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரொமான்டிக் காதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ப்ரீத்தாவுக்கு இணையாக அவரால் நடிக்க கூட முடியாமல் திணறினார்.

காதலே நிம்மதி : 1988 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் முரளி இணைந்து நடித்த திரைப்படம் காதலே நிம்மதி. இந்த படத்தில் ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை முழுக்க காப்பாற்றியது நடிகர் முரளி தான். தேவாவின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

பெரியண்ணா: தளபதி விஜய்க்கு, கேப்டன் விஜயகாந்த் எப்படி செந்தூர பாண்டி படத்தில் நடித்து கொடுத்தாரோ, அதே போல் சூர்யாவை தூக்கி விட கேப்டன் களம் இறங்கிய திரைப்படம் தான் பெரியண்ணா. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலும் பாடியிருப்பார். செம்ம ஹிட் அடித்த அந்த பாடலுக்கு அந்த நேரத்தில் சூர்யாவுக்கு ஆட கூட தெரியவில்லை.

Also Read:நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

பூவெல்லாம் கேட்டுப்பார்: சூர்யா நடிப்பில் செம ஹிட் அடித்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்த படம் தான் இவருக்கு முதல் வெற்றியை தேடி கொடுத்தது. நடிகை ஜோதிகா அறிமுக ஹீரோயினாக இருந்தாலும், சூர்யாவை நடிப்பில் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.

சூர்யாவின் காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், சூர்யாவை சிவகுமார் வாரிசு என ஆவலாக பார்த்து பின் பாவம் இந்த பையனுக்கு சரியாக நடிப்பும் டான்சும் வரவில்லை என அவர் முதலில் பரிதாபப்பட்டதாக சொல்லியிருந்தார். அதன் பின் நந்தா, காக்க காக்க, மௌனம் பேசியதே,என்று தன்னை மேலும் மேலும் தன்னை தானே வளர்த்துக் கொண்டாராம் சூர்யா.

Also Read:கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

Trending News