Top 6 Actors: 100 நாள் வரை ஒரு படம் ஓடுகிறது என்றால் அப்படத்தின் கதை, நடிப்பு எந்த அளவிற்கு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி படுத்திருக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளும் விதமாய், நடிப்பில் பின்னி பிடல் எடுத்த டாப் 6 ஹீரோக்களின் நூறாவது படம் குறித்த தகவலை இங்கு காண்போம்.
எம்ஜிஆர்: மக்கள் திலகம் என அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் 100வது படம் தான் ஒளிவிளக்கு. ஜெயலலிதா ஹீரோயினாய் இடம் பெற்ற இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் ஹிட் கொடுத்தது.
Also Read: ஹீரோவாக நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்.. ரஜினியின் படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற நடிகர்
சிவாஜி கணேசன்: நடிப்பிற்கே பேர் போன பிரபலமாய் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். தான் ஏற்கும் எந்த கதாப்பாத்திரமானாலும் அதற்கு ஏற்ற நடிப்பினை கொடுக்கும் வல்லமை கொண்டவர். அவ்வாறு மாறுபட்ட ஒன்பது வேடங்களில் தன் நடிப்பினை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்த படம்தான் நவராத்திரி. மேலும் இப்படம் அவருக்கு மக்களிடையே பேராதரவை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்த இவரின் நூறாவது படம் ராஜபார்வை. தானே தயாரிப்பு மற்றும் நடிப்பை மேற்கொண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் பல கோடி நஷ்டத்தை உருவாக்கி தோல்வி படமாக அமைந்தது.
Also Read: மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்த நெல்சன்.. ஓவர் வன்முறையால் ரசிக்க முடியாமல் போன ஜெயிலர்
ரஜினி: வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி அதன்பின் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்த இவரின் நூறாவது படம் ராகவேந்திராவை பற்றி இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதம் பிடித்து ஸ்ரீ ராகவேந்திரா என்னும் படத்தில் நடித்தார். இருப்பினும் கலவையான விமர்சனங்களை பெற்று போதிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்: தனக்கான அங்கீகாரத்தை நடிப்பில் உருவாக்கிக் கொண்ட இவர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் தனது நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை மேற்கொண்டார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் ஹிட் கொடுத்தது. எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு நூறாவது படத்தில் வெற்றி கண்ட ஒரே நாயகன் விஜயகாந்த் என்ற பெயரும் இவரையே சார்ந்தது.
Also Read: எளிமையின் மொத்த உருவமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. இமயமலையிலிருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ
சத்யராஜ்: ரஜினி கமல் காலத்தை சேர்ந்த சத்யராஜ் எண்ணற்ற படங்களில் நடித்து வெற்றி கொடுத்திருக்கிறார். இருப்பினும் தன் நூறாவது படமான வாத்தியார் வீட்டு பிள்ளை இவருக்கு போதிய வரவேற்பை பெற்று தராமல் தோல்வியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.