நம்ம ரசிகர்கள் தூக்கி விட்ட 6 மலையாள ஹீரோக்கள்..

6 Popular Malayalam heroes: பொதுவாக மற்ற மொழி நடிகைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நடிகர்களுக்கு வரவேற்பு கொடுக்க மாட்டார்கள். நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அப்படி ஒன்றிரண்டு படங்களோடு முடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆறு மலையாள நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இவர்களை தமிழ் நடிகர்களாகவே பார்த்து அவருடைய படங்களுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

பகத் பாசில்: நடிகை நஸ்ரியாவின் திருமண சமயத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை போல் பகத் பாசிலை வெறுத்தவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற மாமன்னன் படத்தின் மூலம் தற்போது பட்டி தொட்டி எங்கும் பாராட்டை பெற்று வருகிறார்.

மம்மூட்டி: நடிகர் மம்முட்டி தமிழில் நடித்த மௌனம் சம்மதம், ஆணழகன் போன்ற படங்கள் அவருக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகளை அதிகம் ஆக்கின. அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் தான். இன்றுவரை தமிழ்நாடு ரசிகர்களின் தேவாவாக இவர் ரசிக்கப்படுகிறார். இவருடைய நடிப்பில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படமும் முக்கியமான ஒன்று.

ஜெயராம்: நடிகர் ஜெயராம் மலையாள சினிமாவில் இருந்து வந்து இங்கு நடித்துக் கொண்டிருக்கிறார் ரசிகர்களே நினைக்காத அளவுக்கு ரசிகர்களோடு ஒன்றோடு ஒன்றாகி போனார். அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவரின் நிறைய படங்கள் இன்று வரை மீண்டும் மீண்டும் பார்க்கும் லிஸ்டில் இருக்கின்றன. இதில் பஞ்சதந்திரம் படம் மிக முக்கியமான ஒன்று.

துல்கர் சல்மான்: துல்கர் சல்மான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிகர் மம்முட்டியின் மகனாக அடையாளப்படுத்தப்பட்டாலும், பின்னர் தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் தனக்கென ஒரு பெயர் வாங்கிக் கொண்டார். இவருடைய நடிப்பில் ஓகே கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன.

காளிதாஸ் ஜெயராம்: காளிதாஸ் ஜெயராம் பேருக்குத்தான் மலையாள நடிகர் என்றாலும், அவருடைய மொத்த நாட்டமும் தமிழ் சினிமா மட்டும் தான். பாவ கதைகள் என்னும் தொடரில் இவர் நடித்த கேரக்டர் நடிப்பின் மீதான இவருடைய காதலைத்தான் சொல்லியிருந்தது.

மோகன்லால்: நடிகர் மோகன்லால் அவ்வளவாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய ரீமேக் படங்கள் கூட ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஒன்று. மோகன்லாலுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூட்டம் அதிகம். சமீபத்தில் இவர் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தது மோகன்லாலின் ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →