வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

குரங்கு போல் தாவும் சங்கரின் மனசு.. இரண்டு ஹீரோக்கும் டாட்டா போட்டு 1000 கோடி படத்துக்கு செலக்ட் செய்த நடிகர்

Director Shankar: தமிழ் சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் படங்களை எடுக்க கூடியவர் தான் இயக்குனர் சங்கர். இவர் தற்போது கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை முடித்திருக்கிறார் இதை தொடர்ந்து அவர் அடுத்ததாக தன்னுடைய கனவு படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ப்ளான் போட்டு இருக்கிறார்.

ஆனால் அந்தப் படத்திற்கு யார் கதாநாயகன் என்பதை தேர்வு செய்வதில் மட்டும் ரொம்பவே தடுமாறுகிறார் இந்த விஷயத்தில் சங்கரின் மனம் குரங்கு மாதிரி தாவிக் கொண்டே இருக்கிறது. சங்கர் தனது கனவு படமான வேள்பாரிக்கு 2 ஹீரோக்களை செலக்ட் செய்து வைத்தார்.

Also Read: கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

ஆனால் இப்பொழுது அவர்களும் வேண்டாம் என வேறு ஹீரோ பக்கம் தாவியுள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கு கன்னட நடிகர் யாஷை செலக்ட் செய்து வைத்திருந்தார். கேஜிஎஃப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டிய யாஷை பார்த்து இவர்தான் வேள்பாரி படத்தின் ஹீரோ என லாக் செய்தார்.

அதன் பின்னர் யாசும் வேண்டாம், விஜய் நடித்த நல்லா இருக்கும் என எண்ணினார். இப்பொழுது சங்கரின் மேனேஜர் தங்கதுரை ஒரு புதிய ஹீரோவை நடிக்க வைக்க ஆசை காட்டி உள்ளார். கங்குவார படத்தில் சூர்யாவின் கெட்டப் நன்றாக இருக்கிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் சரி, இப்போது கங்குவா படத்திலும் சரி சூர்யா தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

அவர் வேள்பாரி கதைக்கு பொருந்துவார் என கொளுத்தி போட்டுள்ளார். இந்த தங்கதுரை தான் சூர்யா-விற்கும் மேனேஜர். சங்கர் மகள் அதிதி சங்கருக்கும் தங்கதுரை தான் மேனேஜர். அப்போ எப்படி பார்த்தாலும் சூர்யா தான் கன்ஃபார்ம் ஆவார் போல் தெரிகிறது. முன்பு தேர்வு செய்து வைத்திருந்த யாஷ், விஜய் இருவருக்கும் டாட்டா காட்டிவிட்டார்.

ஏற்கனவே ‘நண்பன்’ படத்தில் விஜய் கதாபாத்திரம் முதலில் சூர்யா தான் பண்ணுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் மாற்றப்பட்டார் 11 வருடத்திற்கு முன்பு நடந்ததை இப்போது சரி செய்வதற்காகவும் வேள்பாரி படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க சங்கர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

Trending News