MGR, Shivaji: காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பமும் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்போது படம் எடுக்க இருந்த சிரமங்கள் எல்லாமே இப்போது தொழில்நுட்பம் மூலமாக எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் படங்கள் அப்போது பார்க்கப்பட்ட திரையை விட இப்போது துல்லியமாக ரசிகர்கள் பார்த்து கண்டு களிக்க முடிகிறது.
இந்நிலையில் கடந்த சினிமா வாழ்க்கையில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் எது என்பதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது.
Also Read : ஏவிஎம், எம்ஜிஆர் கூட்டணியில் உருவான ஒரே ஒரு படம்.. பட்ஜெட் மட்டும் இவ்வளவா?
அதாவது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மக்கள் அதிகம் பார்த்துள்ளனர் என்று புள்ளி விவரத்தை கூறியிருக்கிறார். அதன்படி எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படைத்த சாதனையை தற்போது வரை உள்ள ஹீரோக்களால் முறியடிக்க முடியவில்லை என்று சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.
அதாவது சிவாஜி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் திரிசூலம். 1979 ஆம் ஆண்டு சிவாஜி, கே ஆர் விஜயா மற்றும் பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. அதன்படி சிவாஜியின் திரை வாழ்க்கையில் 200 நாட்களை தாண்டி ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜிக்கு திரிசூலம் போல் எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் படம்.
Also Read : எம்ஜிஆர் பொறாமைப்படும் அளவிற்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கிய கமல்.. வைக்க கூடாதுன்னு பண்ணிய போராட்டம்
இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜிஆர் இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் லதா, மஞ்சுளா, சந்திரலேகா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். பல எதிர்ப்புகளை மீறி தான் இந்த படத்தை எம்ஜிஆர் திரையில் வெளியிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். மேலும் இப்படம் அதிக நாட்கள் ஓடி கிட்டத்தட்ட 4.2 கோடி வசூல் செய்திருந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியானாலும் இந்தப் படங்கள் ஓடிய நாட்களை தாண்டி ஓடவில்லை என்று சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.
Also Read : சிவாஜி போட்ட சூடு.. கடைசி வரை இந்த 3 பிரபலங்களை வைத்து படம் எடுக்காத பாலச்சந்தர்